மோட்டார் சைக்கிள்களுக்கான புகைப்பரிசோதனை
நிறுத்தப்பட வேண்டும்!
புதிய அரசு இவ்விடயத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்
வாகனங்களின்
புகை பரிசோதிக்கப்பட
வேண்டிய கட்டாய கடப்பாடு கைத்தொழில்மய நாடுகளுக்கு
உண்டு..எமது
நாடு ஒரு
விவசாய நாடு.இங்கு வளிமண்டலமாசு
தொடர்பான முறைப்பாடுகள்
பெரிய அளவில் இல்லை. கொழும்பு,
கண்டி போன்ற
மாநகரங்களில் புகைப்பரிசோதனை செய்யப்படுவதில் ஓரளவு
நியாயம் இருக்கலாம்.
மாறாக
தாவரப் போர்வையால்சூழப்பட்டுள்ள
கிராமப் பகுதிகளிலும்
வாகனப்புகைப் பரிசோதனை செய்யப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது.
பெற்றோல் வாகனங்களில்
புகை குறைவானது,ஆனால் டீசல் வாகனங்களில்
புகை அதிகமானது. பஸ், லொறி,
கெண்டர், பாரவூர்தி
போன்றன அதிக
புகை விடுபவை.
ஆனால்,
நடுத்தர வருமானமுள்ள மக்களின் மோட்டார் சைக்கிள்களுக்கும் புகைப் பரிசோதனைக்காக செலவு செ;ய்ய வேண்டி உள்ளது.
இது இவர்களுக்கு
பெரும் தொல்லையாக உள்ளது. மக்களின் பொருளாதாரப்
பிரச்சினைகளைப்பற்றி அதிகம் சிந்திக்கும்
புத்தஜீவிகளைக்கொண்ட புதிய அரசு இவ்விடயத்தை
மீள்பரிசீலனை செய்யவேண்டும் .ஒரு சிலரின் தேவைக்காக
இப் புகைப்பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டதா? என்றகேள்வி மக்கள்
மனதில் உள்ளது.
0 comments:
Post a Comment