டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மேற்கு இந்திய தீவுகள் அணியின்
ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோ ஓய்வு


மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோ டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகக்கோப்பைக்கான அணியில் டிவைன் பிராவோ தேர்வு செய்யப்படவில்லை. இதனால் கிளைவ் லாய்ட் உள்ளிட்டோர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கடந்த 4 ஆண்டுகளாக பிராவோ அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
தனது ஓய்வு பற்றி பிராவோ கூறும்போது, “நான் சில ஆண்டுகளாக மேற்கு இந்திய தீவுகளுக்காக உற்சாகமாக விளையாடி வந்தேன். மேற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் உலக கிரிக்கெட் ரசிகர்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறேன் என்ற ஆழமான உணர்வில் நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தேன்எங்கள் அனைவருக்கும் இது கடினமான காலம் என்பதை நான் அறிவேன்என்று தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார் பிராவோ.
40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 2,200 ஓட்டங்களை 31 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள் அடங்கும். குறிப்பாக 2005-இல் ஆஸி.க்கு எதிராக இவர் எடுத்த 113 ஓட்டங்கள் சிறப்பான ஆட்டமாக அமைந்தது. 86 டெஸ்ட் விக்கெட்டுகளையும் இவர் கைப்பற்றியுள்ளார்.

இவரது அபார பந்து வீச்சு மற்றும் பின்னால் களமிறங்கி ஆடும் முக்கியமான பேட்டிங் இன்னிங்ஸ்கள், அனைத்தையும் விட அபாரமான பீல்டிங்கிற்காக எப்போதும் இவரை நினைவில் வைத்துக் கொள்ளும்படியாக உற்சாகத்துடன் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top