கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம்
இனவாத சக்திகள் தமக்கு
சாதகமாக பயன்படுத்தும்
ஆபத்தான நிலை
- முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்
நடந்து
முடிந்த ஜனாதிபதி
தேர்தலில் தமிழ்
முஸ்லிம் மக்கள்
ஒரு தீர்க்கமான
சக்தியாக தம்மை
அடையாளப்படுத்தி இருக்கும் நிலையில் தற்சமயம் எழுந்துள்ள
கிழக்கு மாகாண
முதலமைச்சர் விவகார அதிகாரத்துவ போட்டியை இனவாத
சக்திகள் தமக்கு
சாதகமாக பயன்படுத்தும்
ஆபத்து இருப்பதை
நாம் மறந்து
விடக்கூடாது. என முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை
அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்
கவலை தெரிவித்துள்ளார்.
கிழக்கு
மாகாண முதலமைச்சர்
விவகாரத்தில் பல காய்நகர்த்தல்கள் மறைமுகமாக நடைபெற்று
வருவதால் தமிழ்
முஸ்லிம் மக்களின்;
தற்போதைய ஐக்கியமான
வாழ்வில் ஆபத்தான
ஒரு சூழல்
உருவாகலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர்
மேலும் தெரிவித்திருப்பதாவது,
கிழக்கு
மாகாண சபையின்
ஆட்சி, அதிகாரத்தை
பகிர்ந்து கொள்வதில்
இனரீயாக பிளவூபட்டு
சிந்திக்கும் பாதகமான சூழலொன்று தற்போது தமிழ்,
முஸ்லிம் தலைவர்கள்
மத்தியில் உருவாகியிருக்கிறது.
முஸ்லிம்கள்தான்
முதலமைச்சராக வர வேண்டும் என முஸ்லிம்
தரப்பு அரசியல்
தலைவர்களும் மறுபக்கத்தில் தமிழர்கள்தான்
முதலமைச்சராக வரவேண்டுமென தமிழ் கூட்டமைப்பினரும் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிலை இதனால்
உருவாகி இருக்கிறது.
கடந்த
ஒரு வாரகாலமாக
இருதரப்பு தலைவர்களும்
இதற்கான இணக்கப்
பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போதும் அந்த முயற்சி
கைகூடவில்லை எனவும் ஊடகங்கள் மூலமாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்
முஸ்லிம் மக்களின்
ஒற்றுமையில் அதிகாரத்துக்கு வந்துள்ள புதிய அரசாங்கத்தின்
பேரினவாத தரப்புக்கள்
தமிழ் முஸ்லிம்களின்
புதிய ஒற்iறுமையான சூழலை
ஒருபோதும் விரும்பமாட்டார்கள்
என்பதை தமிழ்
மொழி பேசும்
தமிழ், முஸ்லிம்
மக்கள் நன்கு
புரிந்து கொள்ள
வேண்டும்..
இந்த
விவகாரத்தில் பல காய் நகர்த்தல்கள் மறைமுகமாக
நடைபெற்று வருவதால்
தமிழ் முஸ்லிம்
மக்களின்; தற்போதைய
ஐக்கியமான வாழ்வில்
ஆபத்தான ஒரு
சூழல் உருவாகலாம்
என்பதை தமிழ்
மொழி பேசும்
மக்களாகிய நாம்
நன்கு புரிந்து
கொள்ள வேண்டும்.
நெருக்கடியான
இந்த நிலமையை
விளங்கிக்கொண்டு இருதரப்iயூம் சார்ந்த சிவில்
சமுகத்தினர் இந்த விடயத்தில் பார்வையாளர் என்கின்ற
நிலமையை தாண்டி
பங்காளிகளாக மாற வேண்டிய அவசியம் தற்போது
ஏற்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்து
செயல்படல் வேண்டும்.
நீண்ட
காலமாக தமிழ்
முஸ்லிம் மக்களிடையேயான
உறவுக்கும் முரண்பாட்டுக்கும் பிரதான தளமாக கிழக்கு
மாகாணமே விளங்கி
வந்திருப்பதை கவனத்திலெடுத்து தற்சமயம் எழுந்துள்ள முரண்பாடான
நிலமையை வெறுமனே
இனவாத அரசியல்
தலைமைகள் தமக்கு
வசதியாக கையாள்வதற்கு
அனுமதிக்கக் கூடாது. தமிழ், முஸ்லிம் தலைமைத்துவங்கள்
தமக்கிடையே விட்டுக் கொடுப்புகளுடன் ஒரு முன்மாதிரியாக
இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு முன்னாள்
அமைச்சர் மன்சூர்
தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி. |
0 comments:
Post a Comment