மிச்செல் ஒபமா முகத்தை சவூதி அரேபிய ஊடகங்கள்
 மங்கலாக காட்டியாதாக சர்ச்சை

சவூதி அரேபியா தூதரகம் மறுப்பு




தலையில் ஸ்கார்ப் அணியாததால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவின் முகத்தை சவூதி அரேபிய ஊடகங்கள் மங்கலாக காட்டியதாக பெரும்  சர்ச்சை வெடித்து உள்ளது.. ஆனால் மிச்செல் ஒபமா முகம் தெளிவாக காட்டப்பட்டது என்று சவூதி அரேபிய தூதரகம்  வெளியான சர்ச்சைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா  இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நேற்று சவூதி அரேபியா சென்றனர். சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா அண்மையில் மரணம் அடைந்தற்கு இரங்கல் தெரிவிக்கும் நோக்கில் ஒபாமா - மிச்செல்  தம்பதியினர் அங்கு சென்றனர்.
 இந்த நிலையில், சவூதி அரேபியா சென்ற மிச்செல் ஒபாமாவின் முகத்தை அங்குள்ள ஊடகங்கள் மங்கலாக காட்டியதாக யூடியூப் இணையதளத்தில் சில வீடியோ பதிவுகள் வெளியான. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால், சவூதி அரேபியா தூதரகம் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் நிரகரித்துள்ளது. இது தொடர்பாக சவூதி அரேபிய தூதரகம் டிவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-
சவூதி அரேபியா தொலைக்காட்சிகள் மிச்செல் ஒபமாவின் முகத்தை மங்கலாக காட்டியாதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. உண்மையை நீங்கள் பேஸ்புக்கில் சோதனை செய்து பார்க்காதீர்கள். யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் வேண்டும் என்றே மிச்செல் ஒபாமாவின் முகம் மங்கலாக காட்டப்பட்டுள்ளது. ஆனால்,ஒபாமா  ரியாத் வருகை தந்த பொழுது நீங்கள் நேரடி ஒளிபரப்பை பார்திருந்தால் அதில் யாருடைய முகமும் மங்கலாக காட்டவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்க முடியும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வால் ஸ்டிரீட் பத்திரிகையின் சவூதி அரேபிய நிருபர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”மிச்செல் ஒபமாவின் முகம் சவூதி அரேபிய ஊடகங்களில் மங்கலாக காட்டப்படவில்லைஎன்று தெரிவித்துள்ளார்.
ஆனால் டிவிட்டரில்  மிச்செல் ஒபாமா பர்தா அணியாதது குறித்த விமர்சனங்களும் அதற்கு எதிர் கருத்துக்களும் பதியபட்டு கடும் வார்த்தைபோர் நடைபெற்று வருகிறது.

மன்னர் ஆட்சி நடைமுறையில் உள்ள சவூதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான ஆடைக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபிய பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது  தளர்வான பர்தா மற்றும் கருப்பு அங்கிகள் அணியவேண்டும் என்ற கடுமையான விதிகள் அங்குள்ளன. இதனால் சவூதி அரேபியாவில் பெரும்பாலான பெண்கள் தங்கள் முகத்தை நிகாப் எனப்படும் பர்தா அணிந்தே வெளி இடங்களுக்கு செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் வெளிநாட்டு பெண்கள் இவ்வாறு செல்ல வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. சவூதி அரேபியாவுக்கு செல்லும் மேற்கத்திய பெண்கள் பர்தா அணிந்து செல்வது இல்லை.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top