மங்கள சமரவீர - சுஸ்மா
சுவராஜ் இடையிலான சந்திப்பு
இலங்கை
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும்
இடையிலான சந்திப்பு, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை - புதுடெல்லியிலுள்ள சவுத் புளொக்கில்
இடம்பெற்றது.
இந்த
இருதரப்பு பேச்சுவார்த்தையின்
போது, இருநாட்டு
உறவுகளை வலுப்படுத்துவது
குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களின்
நல்வாழ்வுத் திட்டங்கள், இந்தியாவில் வசிக்கும் இலங்கை
அகதிகளின் எதிர்காலம்,
இலங்கையில் உள்கட்டமைப்புத் திட்டங்கள்,
பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு போன்றவற்றில்இப்பேச்சுவார்த்தை
இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. .
இலங்கை
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜி, பிரதமர்
நரேந்திர மோடி,
காங்கிரஸ் தலைவர்
சோனியா காந்தி,
பாஜக மூத்த
தலைவர் எல்.கே. அத்வானி
உள்ளிட்ட முக்கியத்
தலைவர்களையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசுவார்
எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார
அமைச்சராக பதவியேற்றதன்
பின்னர், மங்கள
சமரவீரவின் முதலாவது வெளிநாட்டு பயணமாக இது
அமைந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment