பழம்பெரும் நடிகர் வி.எஸ். ராகவன் உயிரிழப்பு
பழம்பெரும்
நடிகர் வி.எஸ். ராகவன் (வயது90) சிகிச்சை
பலனின்றி மருத்துவமனையில்
உயிரிழந்தார்.
நடிகர்
வி.எஸ்.
ராகவன் வயிற்றுப்
புற்றுநோய் பாதிப்பால் சென்னை தி.நகரில்
உள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இன்று
மாலை சிசிக்சை
பலன் இன்றி
உயிரிழந்தார்.
காஞ்சிபுரம்
மாவட்டம் வெம்பாக்கம்
கிராமத்தில் 1925-ஆம் ஆண்டு பிறந்தவர் வி.எஸ். ராகவன்.
வைரமாலை திரைப்படத்தின்
மூலம் கடந்த
1954-ம் ஆண்டு
திரையுலகத்தில் அறிமுகமான இவர் அதுவரை 1000-த்திற்கும்
மேற்பட்ட படங்களில்
நடித்துள்ளார். குறிப்பாக, குணச்சித்திர வேடங்களில் இவரது
புகழ் என்றும்
அழியாதவை. எம்.ஜி.ஆர்,
சிவாஜி, ரஜினி,
கமல் முதல்
இப்போதைய அஜித்,
விஜய், விமல்
வரை அனைத்து
முன்னணி நடிகர்களுடனும்
நடித்திருக்கிறார். சென்னை தி.நகரில் வசித்து
வந்த வி.எஸ்.ராகவன்
திடீர் உடல்நலக்குறைவு
காரணமாக தனியார்
மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை
பலனின்றி இன்று
காலமானார்.
தனது
இளமை பருவ
காலத்தில் நாடங்களிலும்
முத்திரைப்பதித்து பின்னர் சினிமா
அடியெடுத்து வைத்து பல படங்களில் நடித்துள்ள
ராகவனுக்கு, தான் சாகும் வரை நடித்துக்கொண்டே
இருக்க வேண்டும்
என்பது லட்சியமாக
இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment