கிழக்கு மாகாணத்தின்
ஆளுநராக விரும்பப்படும்
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அப்துல்
ரஸாக் மன்சூர்
அவர்கள் நாடறிந்த
சிரேஷ்ட அரசியல்வாதி.
முன்னாள் அமைச்சரான
அவரை கிழக்கு
மாகாண ஆளுநராக
நியமிக்க வேண்டுமென்று
தனி நபர்களும்
சில அமைப்புகளும்
கருத்துகளைத் தெரிவித்துள்ள நிலையில் ஒன்றும் இதுவரை
நடந்ததாகத் தெரியவில்லை.
காரணம்,
இந்த விடயம்
அதிகாரத்தில் உள்ள எந்த அரசியல்வாதியின் கவனத்தையும்
சரியான முறையில்
ஈர்க்கப்படவில்லை. அத்துடன் கோரிக்கைகள்
முன்வைக்கப்படவும் இல்லை என்றே
கூற முடியும்.
இந்த விடயத்தில்
அக்கறை கொண்டுள்ள
நபர்கள், அமைப்புகள்
அல்லது பிற
நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள்,
அமைச்சர்களது கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால் இதுவரை
ஏதாவது நடந்திருக்கலாம்.
.
மன்சூர்
அவர்களை கிழக்கு
மாகாண ஆளுநராக
நியமிக்க வேண்டுமென
கருத்துகள், அறிக்கைகள் மூலம் பலரும் தங்களது
மன ஆதங்கத்தை
வெளிக்காட்டியிருந்தனர். இவர்களின் கோரிக்கையில்
நியாயமும் உண்டுதான்.
மன்சூர் அவர்கள்
ஜே.ஆர்.
அரசாங்கத்தில் யாழ். மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான
மாவட்ட அமைச்சராகவும்
செயற்பட்டு அனைத்த இன மக்களினதும் பேரபிமானத்தை
பெற்ற ஒருவர்.
தமிழ்-
முஸ்லிம் உறவினை
கட்டிக் காத்த
விடயத்தில் அவரது பங்களிப்பு மிகப் பாரியது.
அரசியலிருந்து இன்று ஓய்வு பெற்றுள்ள நிலையிலும்
அவர் அனைத்து
இன மக்களாலும்
மதிக்கப்படுகிறார். தனது சமூகம்
மீது மிகுந்த
பற்றுடன் அவர்
செயற்பட்ட அதேவேளை,
ஏனைய சமூகங்கள்
பாதிக்கப்படக் கூடாது என்பதில் விசேடமாக, தமிழர்கள்
மீது அதிக
கரிசனை கொண்டிருந்தவர்.
இதன் காரணமாகவே
தமிழ் மக்கள்
அவரை இன்று
வரை நேசிக்கின்றனர்.
கிழக்கு
மாகாணத்தில் இன்று எழுந்துள்ள சூழ்நிலையில் மன்சூர்
அவர்கள் ஆளுநராக
நியமிக்கப்பட்டால் அது அந்த
மாகாணத்தில் வாழும் தமிழ்- முஸ்லிம் மக்களுக்கான
உறவுப் பாலமாகவே
அது அமையும்.
நிச்சயமாக அவர்
இன ஐக்கியத்தைக்
கட்டிக்காப்பார். நியாயமாக நடக்க கூடியவர்.
ஆனால்,
இன்றுள்ள பிரச்சினை
மன்சூர் அவர்களை
ஆளுநராக நியமிக்க
வேண்டுமென்று அரச தரப்பிடம் கூறுவதுதான். அதனை
இன்று அதிகாரத்திலுள்ள
முஸ்லிம் அரசியல்
தலைமைகளே தெரிவித்து
ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதுவும் அடுத்த
புதன்கிழமைக்கு முன்னர் இந்த ஏற்பாடுகள் இடம்பெற
வேண்டும். சம்பந்தப்பட்டோர்
உடன் காரியத்தில்
இறங்குவார்களா? இந்த விடயத்தில் பூனைக்கு யார்
மணி கட்டுவது
என்று யோசித்துக்
கொண்டிருந்தால் காரியம் கை நழுவி விடும்.
0 comments:
Post a Comment