நாட்டில் நல்லாட்சிக்கான
நிலமை தோன்றியுள்ள நிலையில்
மாகாண சபைகள் எதற்காக?
மக்கள்
கேள்வி
நாட்டில்
நல்லாட்சிக்கான நிலமை தோன்றியுள்ள நிலையில் மாகாண சபைகள் எதற்காக? வீண்விரயமாகச் செயல்படும்
அச்சபைகளைக் கலைத்துவிட்டு மக்களின் அதிகரிப்புக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின்
எண்ணிக்கையைக் கூட்டி பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்காக பண ஒதுக்கீடுகளை செய்யுமாறு
மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வடக்கு,
கிழக்கில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களின் அதிகார பகிர்வுகளுக்கு ஓரளவு நன்மை அளிக்கும்
என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட மாகாண சபைத் திட்டம் மக்களுக்கு சரியான பயண்களைத் தராமல்
தற்பொழுது கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தனிப்பட்டவர்களின் பதவிப் போட்டிகள்
காரணமாக இனக் குரோதங்களையும் வளர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வடக்கு,
கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்ட மாகாண சபைத் திட்டத்தில்
எதுவித நிர்வாகப் பிரச்சினைகளும் தோன்றியிராத ஏனைய சிங்களப் பெரும்பான்மையுள்ள 7 மாகாணங்களில்
வாழும் மக்களிடையேயுள்ள அரசியல்வாதிகள் முதலமச்சர்கள் என்றும் மாகாண அமைச்சர்கள் என்றும்
பதவிகளையும் வாகன வசதிகளையும் பெற்றுகொள்வதற்கு இத்திட்டம் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பதுடன்
மக்களின் பணத்தை வீண்வியமாக்குவதற்கும் சந்தர்ப்பங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
நாட்டிலுள்ள
9 மாகாண சபைகளிலும் மொத்தமாக 455 உறுப்பினர்கள் பதவி வகிக்கிறார்கள். இவர்களுக்கு வாகன
வச்திகள், இருப்பிட வசதிகள், கொடுப்பனவுகள், பண ஒதுக்கீடுகள் என நாட்டு மக்களின் பல
கோடிக்கணக்கான தொகை பணத்தை ஒதுக்க வேண்டியுள்ளது.
நாட்டில்
தற்பொழுது நல்லாட்சிக்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இன குரோதங்களையும், பணத்தை
வீண் விரயங்களையும் செய்யும் இம்மாகாண சபைத் திட்டத்தை ஒழித்துவிட்டு மக்கள் அடர்த்தியாக
வாழும் பிரதேசங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவர்களுக்கான
பண ஒதுக்கீடுகளையும் அதிகரிப்பதன் மூலம் நாட்டு மக்களின் பணத்தை மீதப்படுத்தி அபிவிருத்திக்கு
செலவிட முடியும் என மக்கள் விருப்பம் தெரிவிப்பதுடன் புதிய அரசிடம் கோரிக்கையும் விடுக்கிறார்கள்.
0 comments:
Post a Comment