ஒபாமாவிற்கு இந்திய
ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்பட்ட
இராணுவ வரவேற்பில் தலைமை தாங்கிய பெண் அதிகாரி
இந்திய
ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி
பராக் ஒபாமாவுக்கு இன்று அளிக்கப்பட்ட
இராணுவ வரவேற்புக்கு
இந்திய வரலாற்றிலேயே
முதன்முறையாக பூஜா என்ற பெண் அதிகாரி தலைமையேற்று
பெண்களுக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய
விமானப்படையில் கடந்த 2000 ஆம் ஆண்டு பணியில்
சேர்ந்த பூஜா
தாக்கூர், தற்போது
விமானப்படையின் விளம்பரத்துறை கிளையில் பணியாற்றி வருகிறார்.
ஆணும் பெண்ணும்
சமம் என்ற
வகையில், இன்று
ஜனாதிபதி மாளிகையில்
அமெரிக்க ஜனாதிபதி
பராக் ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட இராணுவ
வரவேற்புக்கு இவர் தலைமையேற்றார்.
இதுகுறித்து
பூஜாவிடம் ஊடகவியலாளர்கள்
கேட்டதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு வரவேற்பு அளிக்கும் அணி வகுப்புக்கு
தலைமை தாங்கியது
பெருமைக்குரியதாகும் என்று கூறியுள்ளார்.
நாளை நடைபெறவுள்ள
இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பின் முக்கிய
கருப்பொருளாக பெண்களின் சக்தி என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.