NFGGயினால்  ஸ்ரீலங்கா முஸ்லிம் கங்கிரஸ் தலைவருக்கு

அன்பின் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்களுக்கு,
அரசியல் அடக்குமுறை, வன்முறை மற்றும் காடைத்தனம் என்பனவத்திற்கு எதிராக வாக்களித்தே மக்கள் இன்று இந்த மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும்.
இறுதி நேரத்திலேயே நீங்கள் இணைந்துகொண்ட போதிலும்கூட  நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவே தானும் முன்வந்திருப்பதாக நீங்கள் கூறிக்கொண்டிக்கும் அதேவேளை  உங்களின் உள்ளூர் தலைவர்களின் ஆதரவுடன் உங்கள் கட்சிக்காரர்கள் NFGGக்கு எதிராக மேற்கொள்ளும் காடைத்தனம் ம்குந்த கவலையையும் வேதனையையும் அளிக்கின்றது.
நாகரிகமான முற்போக்கான அரசியலை நோக்கிய மாற்றம் நிகழத்தொடங்கிவிட்டிருக்கின்ற நிலையில் உங்கள் கட்சியானது அநாகரிகமான அரசியல் கலாசாரத்தை ஏன் தொடர்கின்றது என்பது எங்களுக்குப் புரியவில்லை.
NFGG க்கு எதிராக உங்களின் கட்சிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் இப்படியான வன்முறைகளுக்கு நீங்களும் ஆதரவளிக்கின்றீர்களா? என்பதையும் அறிந்து கொள்ள விரும்புகின்றேன். இதற்கான தங்களின் பதிலையும் எதிர்பார்க்கின்றேன்.
பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
(தவிசாளர்,NFGG)





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top