அலரி மாளிகையில் புதிது புதிதாக கட்டடங்கள்
ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு
இணையாக
அவைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும்
தெரிவிப்பு!
மஹிந்த
ராஜபக்ஸ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதயில்
அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில்
இருந்த பெரும்
தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுமாத்திரமல்லாமல்,அலரி
மாளிகைக்குள் புதிது புதிதாக நவீன முறையில் ஆடம்பரமான
கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
புதிய அரசின் பிரதமராக
ரணில் விக்கிரமசிங்க
நேற்று தனது
கடமைகளை அலரி
மாளிகையில் ஆரம்பித்தார்.
அதன்பின்னர்
மாலையில் தனது
கட்சி அமைச்சர்கள்.பிரதி அமைச்சர்கள்
மற்றும் அமைச்சரவை
அந்தஸ்து அற்ற
அமைச்சர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அதற்கு ஊடவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கலந்துரையாடலின்
முடிவில் அலரி
மாளிகையைச் சுற்றிப் பார்க்க அனைவருக்கும் சந்தர்ப்பம்
வழங்கப்பட்டது. அதன் போதே அலரி மாளிகையில் உள்ள சுகபோக வாழ்க்கைக்குரிய வசதிகள் காணக்கூடியதாக
இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அலரி மாளிகையில்
புதிது புதிதாக கட்டடங்கள் முளைத்திருப்பதும்,ஐந்து நட்சத்திர
விடுதிகளுக்கு இணையாக அவை அமைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனைவிட
அங்கு ஆயிரக்கணக்கான
கணினிகள்,அதற்குரிய
மல்ரி பிரின்டேஸ்
என்பன பெருந்தொகையில்
அடுக்கி வைக்கப்பட்டிருந்ததையும்
காணக்கூடியதாக இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment