முன்னாள் இராணுவத் தளபதி
சரத் பொன்சேகாவிற்கு
எதிரான அனைத்து வழக்குகளும் ரத்து
முன்னாள்
இராணுவத் தளபதி
சரத் பொன்சேகாவிற்கு
எதிரான அனைத்து
வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேனவின் செயலாலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த
தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டுப்
போரின் இறுதிகட்டத்தில்
இராணுவத் தளபதியாக
இருந்த சரத்
பொன்சேகா, அப்போதைய
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கருத்து வேறுபாடு
கொண்டு பிரிந்து
விட்டார். 2010-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளராக போட்டியிட்ட பொன்சேகா,
தோல்வியடைந்த பிறகு கைது செய்யப்பட்டு இராணுவ
நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
சரத் பொன்சேகாவின் இராணுவ அந்தஸ்த்தும்
பறிக்கப்பட்டது.
இந்நிலையில்
அண்மையில் நடைபெற்ற
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது
வேட்பாளர் மைத்ரிபால
சிறிசேனவுக்கு சரத் பொன்சேகா ஆதரவு கொடுத்தார்.
தற்போது அவர்
மீதான குற்றச்சாட்டுகள்
ரத்து செய்யப்பட்டு
மீண்டும் ஜெனரல்
அந்தஸ்த்து அளிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment