முன்னாள் ஜனாதிபதி
மஹிந்தவுக்கு அடி மேல் அடி
அரசியலுக்கு முழுக்குப் போடும் நிலை?
ஜனாதிபதித்
தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து,
கட்சித் தலைவர்
பதவியும் பறிக்கப்பட்ட
நிலையில், அரசியலுக்கு
முழுவதுமாக முழுக்குப் போட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ
முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்
பேசும் மக்களின் , வாக்குகளால் ஜனாதிபதி பதவியை இழந்த மஹிந்த ராஜபக்ஸவுக்கு
தற்போது அடிமேல்
அடியாக, கட்சித்
தலைவர் பதவியும்
பறிக்கப்பட்டது.
இந்த
நிலையில், தேர்தல்
முடிவுகள் வெளியானதும்,
இலங்கையில் இராணுவ புரட்சியை ஏற்படுத்தி ஆட்சியைக்
கைப்பற்ற மஹிந்த
ராஜபக்ஸ திட்டமிட்டதாகக் கூறி அவர் மீது
விசாரணையும் நடந்து வருகிறது.
ஜனாதிபதித்
தேர்தலுக்கு மறுநாள் கொழும்பில் 2 ஆயிரம் படையினரை தயார் நிலையில் இருக்க மஹிந்த ராஜபக்ஸ உத்தரவிட்டார். இராணுவ புரட்சிக்காகவே
இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது. வடக்கில் இருந்து அழைக்கப்பட்ட படையினர், கொழும்பைச் சுற்றி
இரண்டு வட்டங்களாக நகர்த்தப்பட்டனர். அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், தேர்தல்கள்
செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கொழும்பு நகரை கைப்பற்றும் நோக்கிலேயே இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது என்று
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இவர்மீது குற்றம்சாட்டி உள்ளார்
இதுமாத்திரமல்லாமல்,
இவரோடு அந்நியமாக இருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா போன்ற பலர் இவரின் குடும்பத்திற்கு
எதிராகச் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளனர்.
இவரின்
அலரி மாளிகை சுகபோக வாழ்க்கையும் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்
மீது இவரின் கட்சி உறுப்பினரே வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவருக்கு நீதிமன்றம் சம்மன்
அனுப்பி உள்ளது.
9,000
கோடி மதிப்பிலான கொழும்பு செயற்கை துறைமுகம் திட்டத்தில் இவர் ஊழல் புரிந்திருப்பதாக
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதித்
தேர்தலில் தோல்வி, ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கட்சி தலைவர் பதவியும் பறிபோனதால்
மஹிந்த ராஜபக்ஸ அரசியலில் இருந்து விலக முடிவு
எடுத்ததாகவும், ஆனால் அவரது ஆதரவாளர்கள் அவரை சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும் அவர் மீதான வழக்குகளின் நெருக்கடியைப்
பொறுத்து எந்த நேரத்திலும், அவர் அரசியலுக்கு முழுக்கு போடலாம் என்று கூறப்படுகிறது.
மஹிந்த
ராஜபக்ஸவுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் வலுத்துக் கொண்டு வருவதால், இலங்கை அரசியலில்
பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஒரு பக்கம் அரசியல் நெருக்கடிகள், மறுபக்கம் வழக்குகளால்
ஏற்பட்டுள்ள நெருக்கடி என்று இவருக்கு சிக்கல் மேல் சிக்கல் அதிகரித்து வருகிறது.
எனவே,
நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் அரசியலுக்கு முழுக்குப்
போட்டுவிட்டு ஒதுங்கியிருக்க மஹிந்த ராஜபக்ஸ
முடிவு செய்துள்ளதாக
உறுதியான தகவல்கள்
கசிந்துள்ளன.
0 comments:
Post a Comment