கிழக்கு மாகாண ஆளுனராக எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால்

நிச்சயமாக அப்பதவியை ஏற்று எனது அனுபவத்தைக் கொண்டு

சிறப்பாக பணியாற்றுவேன்.
 
முன்னாள் அமைச்சர் . ஆர். மன்சூர்
 தினகரனுக்கு வழங்கிய செவ்வி

நேர்காணல்: எஸ். சுரேஷ்




? பல்வேறு போராட்டங்களின் பின்னர் நாட்டு மக்களின் பெரும் ஆதரவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தங்களது நீண்டகால அரசியல் அனுபவங்களிலிருந்து இதனை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

உண்மையில் நீங்கள் குறிப்பிட்டது போன்று மிகவும் கடினமானதொரு போராட் டத்தின் பின்னரேயே மைத்திரிபால சிறி சேன வெற்றிபெற்று ஜனாதிபதியா கப் பதவியேற்றிருக்கிறார். அவரது வெற்றிக்கு உண் மையில் இந்த நாட்டில் வாழ் கின்ற சகல இன மக்க ளுமே காரணமாக இருந்து ள்ளனர். எனது அரசியல் அனுபவத்தில் இவரைப் போன்று மக்களால் இந்தள விற்கு விரும்பப்பட்டு தேர் வான எந்தவொரு தலை வரையும் நான் பார்த்தது இல்லை என்று கூறுமளவி ற்கு சகலரும் இவரது பெயரை உச்சரித் துள்ளனர். இது அவருக்குக் கிடைத்த மா பெரும் வெற்றி. இதுதான் உண்மையான மக்கள் வெற்றி.

? இந்த மாபெரும் மக்கள் வெற்றியை அவர் பெறக் காரணம் என்ன?

இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மைத்திரிபால சிறிசேன எனும் தனி மனித னின் சிறந்த குண இயல்பும், நற்பண்புமே நிச்சயமாக முதலாவது காரணமாக அமை கிறது. கடந்த ஆட்சியாளர் மீது காணப் பட்ட வெறுப்பே முதற் காரணம் எனச் சிலர் கூறினாலும் அதிலும் வெற்றி கண்ட தலைவராக இவரே உள்ளார். முன்னர் இடம்பெற்ற தேர்தல்களின் போதும் மக்கள் தமது வெறுப்பை கடந்த ஆட்சியாளர்கள் மீது காட்டிய போதும் எந்தவொரு சந்தர்ப் பத்திலும் எவராலும் வெற்றி கொள்ள முடி யவில்லை. ஆனால், மைத்திரிபால சிறிசேன இதனை முறியடித்து வெற்றி கண்டார். இத ற்கு அவர்மீது மக்கள் கொண்டிருந்த நம்பி க்கையே காரணம். பல கட்சிகளும் ஓரணி யில் திரண்டு இவரது வெற்றியை உறுதி செய்தன.

இதனை ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி என்றும் கூறலாம்தானே?

நிச்சயமாக, அதனையே நானும் கூறி னேன். இது அவரது நற்பண்புகளால் கிடை த்த தனிமனித வெற்றியுடன் கூட்டு முயற் சிக்கும் கிடைத்த வெற்றி. அவரும் அதனை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளமை அவ ரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. அவர் தனது பதவியேற்பு உரையின் போதும், அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போதும் தனக்குப் பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றி கூறத் தவறவி ல்லை. அத்துடன் அவரது பயணத்தில் அவர் சகல தரப்பினரையும் இணைத்தே செயற்படுகிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பங்கு உள்ளது. அதனா லேயே அவர் தான் உறுதியளித்தவாறு அக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங் கவை உடனடியாகவே பிரதமராக்கி அழகு பார்த்தார். அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மு. கா தலைவர் ரவுப் ஹக்கீம், ...கா தலைவர் ரிசாத் பதியுதீன், தம்பி மனோ கணேசன், சரத் பொன்சேகா ஆகியோருக் கும் நன்றி கூறினார்.

? சிறுபான்மை சமூகமான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தாராளமாகவே கிடைத்துள்ளது. அம்மக்களைப் பிரதிநிதித்தவப்படுத்தும் பிரதான கட்சிகள் சகலதுமே அவருக்கு வெளிப்படையாகவே தமது ஆதரவினை அளித்தன. இதிலிருந்து என்ன புரிகிறது?

அம்மக்கள் கடந்த ஆட்சியில் எந்தளவு தூரம் வெறுப்பைக் கொண்டிருந்தார்கள் என் பது புரிகிறது. இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு இழை க்கப்பட்ட கொடுமைகள், அம்மக்கள் அடை ந்த இழப்புக்கள் அதற்குப் பிரதான காரண மாக அமைந்தன. அதனைவிடவும் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகியும் அம் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்காது இழுத்தடித்து வந்தமை மற்றும் வடமாகாண சபையை சுதந்திரமாக இயங்க விடாது செய்தமை எல்லாம் அம்மக்களது மனங்க ளில் கடந்த ஆட்சியாளர்கள் மீது வெறு ப்பை ஏற்படுத்தியது.

அதேபோன்று முஸ்லிம்கள் மீது சில இன வாத அமைப்புக்கள் வன்முறையைக் கட்ட விழ்த்துவிட்டபோது கடந்த ஆட்சியாளர்கள் மௌனமாக இருந்தமை முஸ்லிம்களை அதிக வெறுப்படைய வைத்தது. குறிப்பாக பேருவளை சம்பவத்தினாலும், பல பிரதேச ங்களில் இடம்பெற்ற பள்ளி உடைப்புச் சம் பவங்களினாலும் முஸ்லிம் சமூகம் வெறுப் படைந்து காணப்பட்டது. அதன் விளைவே ஆட்சி மாற்றத்தை இவ்விரு சமூகங்களும் விரும்பின. வெற்றியும் கண்டன.

? மக்கள் விரும்பிய மாற்றம் மைத்திரிபால சிறிசேனவினால் அவர்களுக்குக் கிடைத்து விட்டது. ஜனாதிபதியான அவர் மக்களுக்கு சேவை செய்வதற்கு ஆரம்பித்தும் விட்டார். ஆனாலும் இன்னமும் சில சில அரசியல் தடங்கல்கள் இருந்து வருகிறது. அதனை அவர் எவ்வாறு முறியடிப்பார்?

இல்லை. இவையொரு தடங்கலே இல்லை. அவர் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிரு க்கிறார். அதனால் சிறு சிறு தடங்கல்களை அவரால் வெற்றி கொள்வது ஒன்றும் கடின மாக இருக்காது. அவர் தனது விஞ்ஞாபன த்தில் குறிப்பிட்டவாறு நூறு நாள் வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வரு கிறார். அதன் பின்னர் அவர் பாராளுமன்ற த்தில் அதிக பெரும்பான்மையை இலகுவா கப் பெற்றுவிடுவார். அவருடன் பிரதான கட் சியான ஐக்கிய தேசியக் கட்சி கைகோர்த் துள்ளது. அத்துடன் சுதந்திரக் கட்சியும் இப்போது அவர் வசமாகியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், hதிக ஹெல உறுமய, கம்ய+னிட் கட்சிகள் எனப் பலவும் அவருடன் நிற்பதால் அவரது பய ணம் வெற்றியாகவே அமையும். தடங்கல் களை ஏற்படுத்த முயல்வோரே தடுக்கி விழு வரே தவிரவும் இந்தப் பலம் மிக்க கூட்ட ணியை இனி அசைப்பது என்பது சிரமமான காரியமாகவே நான் கருதுகிறேன்.

? இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தது. அதன் மூலம் தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்?

நான் முன்னர் குறிப்பிட்டது போன்று அவர்கள் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் கடந்த ஜனாதி பதி மீது வெறுப்படைந்து காணப்பட்டனர். தமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வட மாகாண சபையை நிர்வகிக்க விடாது ஆளு நர் தடையாக இருந்தமை மற்றும் மாகாண சபைக்குரிய நிதியொதுக்கீடுகளை அரசாங் கம் வழங்காமை என்பன அவர்களை வெறு ப்படைய வைத்தது. அதுதவிரவும் வடக்கில் இராணுவ ஆதிக்கம் கட்டுக்கடங்காது காண ப்பட்டது. இதனால் அங்கு மக்களது இய ல்பு வாழ்வு பாதிக்கப்பட்டிருந்தது. இவை யெல்லாவற்றையும் எத்தனையோ தடவை கள் எடுத்துக் கூறியும் கடந்த அரசாங் கமோ, ஜனாதிபதியோ கண்டு கொள்ளவி ல்லை. அதனால் அவற்றுக்குத் தீர்வினைக் காண அவர்கள் இந்தப் புதிய ஜனாதிபதி யிடம் எதிர்பார்க்கிறார்கள். அதில் ஒன்றும் தவறில்லையே.

? புதிய அரசாங்கம் விருப்பம் தெரிவித்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசின் புதிய அமைச்சரவையில் எந்தவிதமான பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்று அரசில் பங்குதாரராகி தமது பிரச்சினைகளைத் தீர்த்திருக்கலாமே?

இப்போதைக்கு எந்தவொரு அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்பது இல்லை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை. அவர்களுக்கு கடந்த கால அர சாங்கங்களிலும் அமைச்சுப் பொறுப்புக்கள் சில முன்வைக்கப்பட்டன. ஆனால் அவர் கள் அவை எதனையும் ஏற்றுக் கொள்ளவி ல்லை. அவர்கள் அமைச்சுப் பதவிகளை அல்ல தமது மக்களது பிரச்சினைகளுக் கான நல்லதோர் தீர்வையே எதிர்பார்க்கி றார்கள். ஆனால் இந்தப் புதிய ஜனாதிபதி யின் தலைமையுடன் இணங்கிச் சென்று சகலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வினை கண்டுவிட வேண்டும். இதனைவிடவும் சிற ந்த சந்தர்ப்பம் இனி அவர்களுக்கு எப்போ துமே கிடையாது. அவர்கள் ஆதரவு வழங் கியமையால் இம்முறை நிச்சயம் இவ்விடய த்தில் அவர்களாகவே முன்வந்து ஒரு தீர் வினைக் காண்பார்கள் என்பது எனது நம்பி க்கை. ,ந்தப் புதிய ஜனாதிபதி மற்றும் பிர தமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் நிச்சயம் இவ்விடயத்தில் ஆதரவு வழங்கு வார்கள்.

? கிழக்கு மாகாண ஆளுனராக தங்களை நியமிக்குமாறு பல பொது அமைப்புக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அத்தகையதொரு சந்தர்ப்பம் தங்களுக்கு வழங்கப்பட்டால்...?

நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன். எனது அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்துமாறு கோரியே கிழக்கு மாகாணத்திலுள்ள பல அமைப்புக்கள் இத்தகையதொரு கோரிக் கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள தாக நானும் அறிந்தேன். ஆனால் இதில் எனது விருப்பம் என்று எதுவும் இல்லை. நான் மாவட்ட அமைச்சராக, மத்திய அர சாங்க அமைச்சராகப் பல தடவைகள் மற் றும் தூதுவராக பணியாற்றியிருக்கிறேன். என்னை ஜனாதிபதி நியமித்தால் நான் எனது அனுபவத்தைக் கொண்டு அங்கு சிறப்பாக பணியாற்றுவேன். குறிப்பாக கிழ க்கு மாகாணம் என்பது மூவின மக்களும் வாழ்ந்துவரும் ஒரு மாகாணம். நானும் அம்மாகாணத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கு இப்பணி இலகுவானதாக இருக் கும்.

? தங்களது எண்ணக் கருவில் உருவான கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்தபோது உங்களது தலைமையில் சென்ற ஒரு தூதுக்குழு சந்தித்துரையாடியது. அப்போது அவரிடம் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. அவை நிறைவேற்றப்பட்டதா?

உண்மையில் நான் இக்கேள்வியைத் தங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். சுகாதார அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இருந்த காலத்தில் அவ ரைப் பற்றிக் குறை கூறுபவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அவை யாவுமே அவர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியே தவ ரவும் அவர் தொடர்பாகக் குறைகூற எது வுமே கிடையாது.

அவரை நாம் சந்தித்துரையாடி சில தேவைகளை நிறைவேற்றித் தருமாறு கேட் டுக் கொண்டோம். அனைத்தையும் பொறு மையாகக் கேட்ட அவரால் அவை யாவுமே நிறைவேற்றப்பட்டன. அவரே நேரடியாக அவற்றைக் கையளிக்க வருவதாக இருந்த போதும் அன்று நிலவிய சில உள்ளுர் அர சியல் சூழல் காரணமாக அவர் சமூகமளிக் கவில்லை.


இப்போது அவரை நாம் ஜனாதிபதியாக அதே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அங்கு நிலவும் ஏனைய குறைபாடு களையும் நிறைவேற்றுவோம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top