புதிய அரசின் முடிவுகளால் முன்னாள் ஜனாதிபதி
மஹிந்தவுக்கு மேலும் நெருக்கடி
புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்கம்,
மஹிந்த
ராஜபக்ஸ ஆட்சியில் நடந்ததாக கூறப்படும்
முறைகேடுகள்
குறித்து
விசாரணையை
தொடங்கி
உள்ளது.
இது
தொடர்பாக
மஹிந்த ராஜபக்ஸவின் வீடு, கோத்தபாயவின் நிறுவனம்
என
பல்வேறு
இடங்களில்
அதிரடி
சோதனைகள்
நடத்தப்பட்டு
வருகிறன.
அதன்படி, பத்திரிகையாளர்
லசந்த
விக்ரமதுங்க,
இரண்டு
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான நடராஜா
ரவிராஜ்
(யாழ்ப்பாணம்),
ஜோசப்
பரராஜசிங்கம்
( மட்டக்களப்பு,
கிழக்கு மாகாணம்) மற்றும் பாரத லட்சுமண், பிரேமச்சந்திர
உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் படுகொலைகள்
குறித்து
விசாரணை
நடத்தப்படும்.
முக்கியமான தமிழ் எம்.பி.க்களான
இருவரும்,
இறுதிகட்ட
போர்
உச்சகட்டத்தில்
இருந்தபோது
கொல்லப்பட்டனர்.
இந்த
கொலைகள்
மீதான
விசாரணை
அனைத்தும்
முடிவு
எட்டப்படாமலேயே
கைவிடப்பட்டது.
இந்த
வழக்குகள்
மீண்டும்
விசாரணைக்கு
எடுத்துக்கொள்வதும்
குறிப்பிடத்தக்கது.
மேலும் இறுதிகட்ட போருக்குப்பின்
வடக்கு
மற்றும்
கிழக்கில்
உள்ள
தமிழர்களிடமிருந்து
அபகரிக்கப்பட்ட
தங்க
நகைகள்,
நிலம்,
சொத்து,
பணம்
போன்றவை
குறித்தும்,
மனித
உரிமை
மீறல்கள்
குறித்தும்
விசாரணை
நடத்தப்படும்.
இதைப்போல தமிழ்
அரசியல்
கைதிகள்
விவகாரம்,
கடந்த
அரசின்
பொருளாதார
கொள்கை
மற்றும்
ஊழல்,
மோசடிகள்
குறித்தும்,
விசாரிக்கப்படும்.
கடந்த தேர்தல் தினத்தன்று மஹிந்த ராஜபக்ஸ
அரசு சட்டவிரோதமாக அரசு வளங்கள் மற்றும் ஊழியர்களை பயன்படுத்தியது
குறித்தும்,
ஆட்சியை
சட்ட
விரோதமாக
தக்கவைப்பதற்காக
அடுத்த
நாள் அதிகாலை சதிதிட்டம் தீட்டியது போன்றவை
குறித்தும்
விசாரிக்க
குழுக்கள்
அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் நடந்ததாக
கூறப்படும்
பல்வேறு
ஊழல்கள்
மற்றும்
படுகொலைகள்,
நில
அபகரிப்பு
போன்றவை
குறித்தும்
விசாரணை
நடத்த
பல்வேறு
குழுக்கள்
அமைக்க
முடிவு
செய்யப்பட்டு
உள்ளது.
இந்த குழுக்கள் அடுத்த
ஓரிரு
நாளில்
அமைக்கப்பட்டு,
குறுகிய
காலத்துக்குள்
விசாரணையை
முடிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படும்
என
தெரிகிறது.
புதிய
அரசின்
இந்த
முடிவால்
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்து வருகிறது..
0 comments:
Post a Comment