இலங்கையின் 67வது
சுதந்திர தினத்தை
நினைவுபடுத்துவோம்
السلام
عليكم ورحمة الله وبركاته
எல்லாம்
வல்ல அல்லாஹ்வின்
அருள் கிடைக்கப்
பிரார்த்திக்கின்றோம்.
எதிர்வரும்
4.2.2015 புதன்கிழமை எமது நாடு
தனது 67வது
சுதந்திர தினத்தை
கொண்டாட ஆயத்தமாகிக்
கொண்டிருக்கிறது.
சுதந்திரத்தைப்
பெற்றெடுப்பதில் நம் சமூகம் பங்கு கொண்டது
என்பதையும்; நமது சமய, சமூக, அரசியல்
தலைமைகள் அன்று
தொட்டு இன்று
வரை நாட்டுப்பற்றோடு
செயற்பட்டுள்ளனர், இன்றும் அவ்வாறே
செயற்பட்டு வருகின்றனர் என்பதனையும்; இந்நாட்டு முஸ்லிம்கள்
பிரிவினைவாத செயற்பாடுகளிலோ, சமய நிந்தனைகளிலோ, சமய
சண்டைகளிலோ ஈடுபடாதவர்கள் என்ற உண்மையையும் வெளிப்படுத்தும்
ஒர் அரிய
சந்தர்ப்பமாக இவ்வருட சுதந்திர தின விழா
அமையப்பெற வேண்டும்.
எனவே
முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் அது சம்பந்தமான
நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் மாற்று மத
சகோதரர்களுடனான சந்திப்புகள் போன்றவற்றை நடத்துவதோடு, எமது
நாட்டின் தேசியக்கொடியை
தத்தம் இல்லங்களிலும்,
பாடசாலைகளிலும், வியாபார நிலையங்களிலும் ஏற்றி நாம்
இந்நாட்டு மக்கள்,
நாம் நாட்டுப்பற்றுடையோர்
என்பதைப் பகிரங்கப்படுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல்
உலமா சகல
முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்வதோடு, பொது வேலைத் திட்டங்கள்,
சிரமதானங்கள் போன்றவற்றின் போது அயலில் வாழும்
பெரும்பான்மையினரையும் இணைத்துக் கொள்வது
சமூக சகவாழ்வுக்கு
வழி வகுக்கும்
என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கின்றது.
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச்
செயலாளர்
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
0 comments:
Post a Comment