2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது விடுதலைப் புலிகளுக்கு
நிதி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் யார்?
இது குறித்தும் விசாரணைகள் ஆரம்பம்


2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் தடுத்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கி வடக்கு மாகாணத்தில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் விடுதலை 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு வீதம் மிக குறைவாக காணப்பட்டது. அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு வீதமானது 1 சதவீதத்திற்கும் குறைவானதாகவே காணப்பட்டது. இதற்கு புலிகளினால் வடக்கு மக்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டமை இதன்காரணம்.
கிளிநொச்சியில் ஒரு வாக்கு மாத்திரமே பதிவாகியிருந்தது. அந்த வாக்கினை அளித்த பெண்ணின் கை விடுதலை புலிகளினால் துண்டிக்கப்பட்டது.
இவ்வாறு வாக்களிப்புக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு விடுதலை புலிகள் அமைப்பிற்கு குறித்த வார்த்தகரான நாடாளுமன்ற உறுப்பினரால் பல கோடி ரூபா நிதி வழங்கப்பட்டமை காரணம் என தெரியவந்தது.
இதன் மூலம், விடுதலை புலிகள் அமைப்பு வடக்கு வாக்களிப்பை புறக்கணிக்க நடவடிக்கை மேற்கொண்டதாக தெளிவாக தெரியவந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வர்த்தகரான நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வடக்கு வாக்களிப்பினை தவிர்ப்பதற்கு 2005 ஜனாதிபதி தேர்தலின் போது விடுதலை புலிகள் அமைப்பிற்கு பல கோடி ரூபாய்களை வழங்கியது எவ்வாறு என்றும் அவ்வாறு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 அத்துடன், அந்த நிதி விடுதலை புலிகள் அமைப்பின் எந்த தலைவருக்கு கொடுக்கப்பட்டது என்றும் அவர் விடுதலை புலிகள் அமைப்புடன் பேணிய தொடர்பு குறித்தும் ஆராயப்பட உள்ளது.
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், குறித்த வர்த்தகரான நாடாளுமன்ற உறுப்பினர் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விடுதலை புலிகள் அமைப்புடன் ஆயுத கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
இதன்போது அவர் பெருமளவான நிதி பயன்பாட்டை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அவர் பல தடவைகள் விடுதலை புலிகள் அமைப்பின் உயர் மட்ட தலைவர்கள் பலருடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ள நிலையில், இவ்வாறு புலிகளின் தலைவர்களை சந்தித்த இடங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top