ஆணாக இருந்து பெண்ணாக உருமாறும்
முன்னாள் ஒலிம்பிக்
வீரர் புரூஸ் ஜென்னர்
அமெரிக்காவின்
முன்னாள் தடகள
வீரர் மற்றும்
தற்பொழுது பேச்சாளர்,
தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொழிலதிபராக இருப்பவர்
வில்லியம் புரூஸ்
ஜென்னர். 65 வயதான இவர் கடந்த 1976 ஆம்
ஆண்டு நடந்த
கோடை கால
ஒலிம்பிக்கில் டெகாத்லான் போட்டியில் தங்க பதக்கம்
வென்றவர்.
இது
மாத்திரமல்லாமல் இவர் தடகள வீரர் என்ற நிலையில்
இருந்து தொலைக்காட்சி
தொடரில் அவர்
நடிக்க ஆரம்பித்தார். இவருக்கு
கிறிஸ்டீ கிரவுன்ஓவர்,
லிண்டா தாம்ப்சன்
மற்றும் கிறிஸ்
ஜென்னர் என
3 மனைவிகள் உள்ளனர். இவர், பர்ட், கேசீ,
பிராண்டன், பிராடி, கெண்டால் மற்றும் கைலீ
ஆகிய 6 பேருக்கு
தந்தையும் ஆவார்.
இந்நிலையில்,
இவர் பெண்ணாக உரு மாற்றம் செய்ய உள்ளதாக
கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினரும் அவரின் நெருங்கிய வட்டாரமும்,
அவர் விரைவில்
பெண்ணாக தனது
வாழ்க்கையை வாழ்வார் என்பதை உறுதி செய்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
ஜென்னர்
பெண்ணாக மாறி
வருகிறார். அவர் இறுதியில் மகிழ்ச்சியாக
இருக்கிறார். அவர் செய்வதை அவரது
குடும்பமும் ஏற்று கொண்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. ஜென்னர்
நீண்ட முடியுடன்,
அலங்காரம் செய்யப்பட்ட
நகங்கள் மற்றும்
பெரிய மார்பகங்களுடன்
சமீப காலங்களில்
காணப்பட்டு வந்தார்.
அவர்
மெல்ல உருமாறி
வந்து தனது
குடும்பத்தினர், தனது புதிய தோற்றம் மற்றும்
புதிய வாழ்க்கையை
ஏற்று கொள்ள
அவகாசம் கொடுக்கும்
வகையில் நடந்து
கொண்டார் என
தகவல் கூறுகிறது. அவரது பெண்ணாக மாறும்
ஆர்வமானது புது
பொலிவு பெறும்
வகையில், இன் டச் நாளிதழில் ஒரு பெண்ணாக எனது வாழ்க்கை என பொருள்பட அட்டையில் பெண் உடையில் தோன்றினார் ஜென்னர்.
அவரது
குழந்தைகளும், எங்களது தந்தை மகிழ்ச்சியாக இருக்க
வேண்டும் என்பதே
எங்களது விருப்பம்
என கூறியுள்ளனர். ஜென்னரின்
3வது மனைவியான
கிறிஸ் ஜென்னரின்
மகளும், பிரபல
நடிகையுமான கிம் கர்தேசியன், ஜென்னர் தனது
தனிப்பட்ட வாழ்க்கை
பயணம் குறித்து
விரைவில் வெளியிடுவார்.
அவர்
இதுவரை தான்
பார்த்திராத வகையில் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்
என கூறியுள்ளார். அதிக மகிழ்ச்சியில் பரவசமாகியுள்ளார். அவர் இருளான நாட்களில்
வாழ்ந்து வந்த
நிலையில் இருந்து
தற்போது வெளியே வந்துள்ளார் என
குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment