நாமல் ராஜபக்ஸ எம்.பி.க்கும் சி..டி நோட்டீஸ்

12ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவிப்பு




முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவை, குற்றப்புலனாய்வு பிரிவில் எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் காரணம் குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த நோட்டீஸை சற்றுமுன்னர் தான் பெற்றுகொண்டதாகவும் நாமல் ராஜபக்ஸ தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாமல் ராஜபக்க்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு இதுவரை எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்
இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்க்ஷ இதனைப் போன்று பொய்யான தகவல்களை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தன்னை எதிர்வரும் 12ஆம் திகதி  குற்றப்புலனாய்வு பிரிவில்   ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தனது முகநூல் பக்கத்தில் இன்று  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ජූනී 12 වන දින අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට ප්රකාශයක් ලබාගැනීමට පැමිණෙන ලෙස දැනුම්දී ඇති අතර, ප්රකාශය ලබාගැනීමට කිසිදු හේතුවක් සදහන් කර නොමැත.

Just received notice to be present at the CID June 12 to record a statement, but no information has been given as to the reason.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top