ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் அருகே
குண்டு வெடிப்பு
17 பேர்
பலி 25 பேர் காயம்
ஆப்கானிஸ்தான்
தலைநகரான காபுலில் உள்ள டே மஸாங் பகுதியில் நாடாளுமன்றத்தின் அருகே இன்று உள்ளூர் நேரத்தின்படி
மாலை 2.00 மணிக்கு தலிபான் குண்டுதாரியினால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார்
84 ஏக்கர் நிலபரப்பில் 90 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்தியாவால் கட்டிக் கொடுக்கப்பட்ட
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர
மோடி திறந்து வைத்திருந்தார்.,
இந்த
நாடாளுமன்றத்தின் அருகே இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஆகக் குறைந்தது 17 பேர் பலியாகியுள்ளதாகவும்
25 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த
ஆண்டு ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தை தரைமட்டமாக்கும் வகையில் தீவிரவாதிகள் ஒன்பது வெடிகுண்டுகளை
வீசி தாக்குதல் நடத்தினர். இதுதவிர கடந்த மாதம் உள்ளூர் செய்தி சேனலில் பணியாற்றும்
சிலர் மினி பஸ் ஒன்றில் பாராளுமன்றத்தின் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது
வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டிவந்த தீவிரவாதி, மினி பஸ் மீது காரை மோதி வெடிக்க
செய்தான். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த பஸ்ஸில் இருந்த பத்திரிகையாளர்கள்
7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த குண்டு வெடிப்பின் போது
அந்த பகுதியில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர் என்பதும்
நினைவிருக்கலாம்.
0 comments:
Post a Comment