நாடெங்கும்
3,333 டெங்கு நோயாளிகள் கண்டுபிடிப்பு!
எவ்வித காய்ச்சலானாலும் இரண்டு நாட்களில்
உரிய
சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்
இலங்கை
முழுவதிலும் இதுவரை 3 ஆயிரத்து 333 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு
மாவட்டம் 1,316 பேருடன் முதலாவது இடத்திலும், கம்பஹா மாவட்டம் 640 பேருடன் இரண்டாவது
இடத்திலும், யாழ். மாவட்டம் 137 பேருடன் மூன்றாவது இடத்திலும், கண்டி மாவட்டம் 133
பேருடன் நான்காவது இடத்திலும், அதற்குப் பிறகு ஏனைய மாவட்டங்கள் வருவதாகவும் தேசிய
டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் எம்.தௌபீக் சமர்ப்பித்திருக்கும் அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
காய்ச்சல்
குணங்குறிகள் தோன்றி இரண்டு நாட்களுக்குள் நோயாளி வைத்திய சிகிச்சை பெறத் தவறுவதே டெங்கு
நோய் மரணத்துக்கு முக்கிய காரணமாகும். இரண்டு நாட்கள் தாமதமானால் நோயின் தாக்கம் தீவிரமடைந்து
சிகிச்சை பலனற்றுப் போக இடமுண்டு.
எனவே,
எவ்வித காய்ச்சலானாலும் இரண்டு நாட்களில் உரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம்
உயிரிழப்புகளை முற்றாகத் தடுக்கலாம் எனவும் டாக்டர் தௌபீக் தனது அறிக்கை மூலம் பொதுமக்களுக்கு
அறிவுரை வழங்கியுள்ளார்.
0 comments:
Post a Comment