டுபாய் தொழிலதிபரின் 5 மில்லியன் நிதியில்

வறிய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு

உதவிக் கொடுப்பனவு வழங்குவதற்கான நிகழ்வு!


கல்முனை கல்வி வலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 225 பேருக்கு கல்விக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் நடைபெற்றது.
மெஸ்றோ நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.நசீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், மெஸ்றோ நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் டுபாய் நாட்டின் அட்லான்டிக்கா நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஷெய்க் நாசிம் அஹமட் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.கனி, பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களுக்கான கொடுப்பனவுச் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகம் என்பன அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
டுபாய் நாட்டின் அட்லான்டிக்கா நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஷெய்க் நாசிம் அஹமட் இத்திட்டத்திற்காக 5 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதற்காக அவர், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட மெஸ்றோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை கல்வி சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.















0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top