செல்போனை சார்ஜில் போட்டபடியே பேசிய

சிறுவனுக்கு பார்வை போன பரிதாபம்


செல்போனை சார்ஜில் போட்டபடியே பேசியபோது செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மதுராந்தகம் அடுத்த செய்யூர் பகுதியை சேர்ந்த தனுஷ் (வயது9) 4ம் வகுப்பு படித்து வரும் மாணவனுக்கே இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் செல்போனை சார்ஜில் போட்டபடியே தனுஷ் போன் பேசியுள்ளான்.
அப்போது திடீரென செல்போன் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்த போது தனுஷின் முகம், வலது கையில் காயம் ஏற்பட்டிருந்தது.
மருத்துவமனையில் தனுஷின் முகம் மற்றும் வலது கையில் ஏற்பட்ட காயத்துக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
கண்களில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு டாக்டர்கள் கூறியதால் எழும்பூர் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு டாக்டர்கள் சிறுவனை பரிசோதனை செய்ததில், அவனது வலது கண் கருவிழி முற்றிலும் சேதமடைந்தும், இடது கண்ணின் முழி கிழிந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் தானமாக கிடைத்த கருவிழியை வலது கண்ணில் பொருத்தியதோடு, இடது கண்ணில் கிழிந்திருந்த இடத்தில் தையல் போட்டு சரிசெய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top