கண்டெடுத்த பெரும் தொகைப் பணத்தை

பிரதி அமைச்சரிடம் அப்படியே ஒப்படைத்து

பாராட்டைப் பெற்றுக் கொண்ட மாணவன்

விளையாட்டு மைதானத்தில் பெரும் தொகைப் பணத்தை கண்டெடுத்து அப்பணத்தை அப்படியே பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த  மாணவன் ஒருவனின் நற்செயல் பலராலும் பாராட்டப்படுகின்றது.
எஸ்.எச்.இஹ்ஸான் எனும் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில்  தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறான நற்செயலைச் செய்து ஏனைய மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டைச் செய்து காட்டியுள்ளான்.
இம்மாணவனுக்கு இன்று 1 ஆம் திகதி திங்கள்கிழமை கல்லூரியில் இடம்பெற்ற  காலைக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டன..
இது சம்மந்தமாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த சனிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தையொட்டிய இறுதி நாள் நிகழ்வுகள் மைதானத்தில்  நடைபெற்றுக் கொண்டிருந்த போது மைதானத்தில் அநாதரவாக கிடந்த பொதியொன்றினை இம்மாணவன் கண்டெடுத்துள்ளார்.
கண்டெடுத்து பொதியை பிரித்து பார்த்த மாணவன் அப்பொதியினுள் பெரும் தொகை பணம் இருப்பதனை கண்டு எவரிடமும் கூறாமல் நேரடியாக மைதானத்தின் மேடையில் அமர்ந்திருந்த பிரதியமைச்சர் எச்.எம்.எம்ஹரீஸிடம்  கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.
இம்மாணவனின் இந்த நற்செயலை மேடையில் வைத்தே பாராட்டிய பிரதியமைச்சர் கல்முனை பொலிஸாரின் உதவியுடன் அப் பணத்தினை உரியவரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது..

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top