எச்சரிக்கை பதிவு
இரவுப்
பயணங்களில் கூடுதல் கவனம் தேவை!!
எமக்கு ஒரு எச்சரிக்கைக்காக இச்சம்பவத்தை
மீண்டும் பதிவேற்றுகின்றோம்.
இச்சம்பவம் எமது அண்டை நாடான இந்தியாவில்
இடம்பெற்றது.
வாடகைக்கு
வாகனம் எடுத்து குடும்பத்தோடு வெளியூர் சென்றோம். அப்போது இரவு 10 மணி இருக்கும். ஒரு
இடத்தில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது.
சிறிது
தூரம் செல்லும் போதே இடது ஓரத்தில் ஒரு வாகனம் உருக்குலைந்து காணப்பட்டு இருந்தது.
அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்ததும் நானும்
எனது மனைவியும் வாகனத்தை நிறுத்துமாறு எங்களது சாரதியிடம் கேட்டோம்.
சாரதியோ
மிகச் சாதாரணமாய் ”பேசாமல் வாருங்கள்,
உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் இது,”என்று
சொல்லி விட்டு பாட்டை சத்தமாக போட்டுக் கொண்டு வாகனத்தை வேகமாக செலுத்தினார். எனக்கும்,
என் மனைவிக்கும் அந்த சாரதி மீது கோபம் கோபமாக வந்தது. ”ஏன் இப்படி நடந்து கொள்கின்றீர்,
உன் அக்காள் தங்கைக்கு இப்படி நடந்தால் இப்படித் தான் செல்வீரா? ஒரு குழந்தை வேறு இருக்கின்றது…
தயவு செய்து வண்டியை நிறுத்துங்க” என்று சொல்ல சாரதி, இன்னமும் வேகமாக வண்டியை செலுத்தினார்.
நான்
எனது தொலைபேசியை எடுத்து அந்த வண்டி உரிமையாளரோடு தொடர்பு கொண்டேன். அது அனைத்து வைக்கப்பட்டு
இருந்தது. இதற்கு முன்னரே சாரதி என்னிடம் எங்கே வேலை பார்க்கிறீர்கள்? எவ்வளவு சம்பளம்
என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தார்? இப்போது லேசாக பயம் வந்தது, சந்தேகமும் வந்தது.
அவ்வப்போது என் மனைவியை வேறு திரும்பி பார்த்து கொண்டிருக்க எனக்கு கூடுதலாய் அவர்
மீது சந்தேகமும் வந்தது. சிறிது தூரத்தில் வெறும் மரங்களாய் இருக்கும் இடம் வந்தது.
இரண்டு பக்கமும் ஆலமரம், நடுவினில் எங்களது வாகனம், இருட்டை கிழித்துக் கொண்டு சென்றது.
திடீரென்று வாகனத்தின் முகப்பினில் எதுவோ தெரித்தது போன்ற உணர்வு. என்னவென்று புரியவில்லை?
ஏதோ பறவை அடிப்பட்டிடுச்சு போல என்று சொல்ல சாரதி மீண்டும் வேகம் எடுத்தார். அதுமட்டுமல்லாமல்
வாகனத்தின் முகப்பு விளக்குகளையும் அணைத்து விட்டு செல்ல எங்கள் இருவருக்கும் பயம்
மேலும் அதிகரித்து விட்டது. ஏன் விளக்கை அனைக்கிறீங்க? என்று கேட்டதும் பேசாம வாங்க,
உங்களை சேர்க்க வேணடிய இடத்துல சேர்த்திடுறேன் என்று சொல்ல நாங்கள் விக்கித்து நின்றோம்.
முதலில்
அந்த விபத்து நடந்த இடத்தில் நிற்கவே இல்லை. பின்னர் ஏதோ பறவை அடிப்பட்டது, அப்போது
கூட நிற்க வில்லை, தற்போது வாகன விளக்குகளையும் அனைத்து விட்டார். என் மனைவி பயத்தில்
உறைந்து போய் என் கைகளை இறுகப்பற்றினாள். சிறிது நேரம் கழித்து ஏதோ ஊர்ப் பகுதி வந்தது.
சரியாய் இருபது நிமிடங்கள் ஆகி இருந்தது. மனதிற்குள் தெம்பு வந்தது. வண்டியை ஒரு பொலிஸ்
நிலையத்தின் முன் நிறுத்தினார். சாரதிக்கு முன்னதாக நான் வாகனத்தைவிட்டு இறங்கி என்
மனைவியையும் இறக்கி வேகமாய் பொலிஸ் நிலையத்திற்கு உள்ளே சென்று அந்த விபத்து மற்றும்
சாரதியின் அதிவேக மற்றும் மனிதாபமான மற்ற செயலையும் விளக்க சாரதி மெல்ல மெல்ல எங்கள்
பின்னே வந்து நின்றார்.
அவர்
சரியாக விபத்து நடந்த இடத்தைப்பற்றி சொல்ல, பொலிஸ் அதிகாரி யாரோ ஒருவருக்கு தகவல் சொன்னார்.
உடனே சிறிது நேரத்திற்கு பின்னர் ஒரு அழைப்பு வந்தது. சம்பவ இடத்தில் அப்படி எந்த ஒரு
வாகனமும் இல்லை என்றும் சொன்னார்கள். எனக்கும் என் மனைவிக்கும் ஆச்சரியமாய் இருந்தது.
அது எப்படி?. அதை அப்புறப்படுத்த குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகுமே? எப்படி?
அப்போது
பொலிஸ் அதிகாரி எங்களிடம் அந்த சாரதி செய்தது நூற்றுக்கு நூறு சரியான செயல். ஒருவேளை
நீங்கள் அங்கே நின்று இருந்தால் இந்த நேரம் உங்கள் நகைகள், பணம், தொலைபேசி கொள்ளையடிக்கப்
பட்டிருககலாம், உங்கள் மனைவிக்கு வேறு விதமான ஆபத்து வந்திருக்கலாம், அல்லது உங்களில்
யாராவது ஒருவர் உயிர் பறி போயிருக்கலாம், அந்த மாதிரியான இடங்களில் வாகனத்தை நிறுத்தாமல்
செல்லுவதே சிறந்த விசயமாகும். அடுத்தது உங்கள் வாகனங்களில் முட்டைகளை வீசுவார்கள்.
அந்த முட்டை தண்ணீரோடு கலக்கப்படுவதால் பிசு பிசுப்பு அதிகமாகி உங்கள் கண்ணாடி பார்வை
முழுமையாக குறைந்து விடும். அதனால் உங்கள் வேகம் குறையும், அப்போதும் கூட உங்களுக்கு
ஆபத்தே. இப்போது உள்ள கொள்ளைக் கும்பல் எல்லாம் அவர்கள் திட்டத்திற்கு குழந்தைகள் மற்றும்
பெண்களை விபத்தில் அடிபட்டவர்களாக நடிக்க வைக்கின்றார்கள். பொதுவாக யாராக இருந்தாலும்
பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றால் கொஞ்சம் இரக்கம் காட்டுவார்கள், உங்கள் பலஹீனம்,
அவர்களது பலம். உங்கள் சாரதி செய்தது மிகச் சரியான விஷயம். அவரை பாராட்டுங்கள். முடிந்தால்
கூடுதல் பணம் கொடுங்கள் என்று சொல்ல நானும் என் மனைவியும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்
கொண்டோம்.
அவர்
எதுவுமே சொல்லாமல் சிரித்து விட்டு வாசலுக்கு சென்று விட்டார். பொலிஸார் எங்கள் விலாசத்தை
குறித்துக் கொண்டு எங்களை அனுப்பி வைத்தனர்.
இரவு
பயணங்களில் கூடுதல் அவதானம் தேவை
0 comments:
Post a Comment