உத்தியோகபூர்வ
வாகனம் துஷ்பிரயோகம்!
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின்
பணி இடைநிறுத்தம்!!
தனக்கு
வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனத்தை உறவினர் ஒருவரின் திருமணம் தொடர்பான வேலைக்கு
கொடுத்திருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக
பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ்மா
அதிபர் என்.கே. இலங்ககோனின் உத்தரவுக்கமைய குறிப்பிட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின்
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது வாகனம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு
ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
சிரேஷ்ட
பிரதிப் பொலிஸ்மா அதிபரின் (நிர்வாகம்) அனுமதியின்றி
மேல் மாகாணத்துக்கு வெளியில் நடந்த திருமணத்துக்கு கான்ஸ்டபிள் சாரதியுடன் உத்தியோகபூர்வ
வாகனத்தை அனுப்பியது பொலிஸ் சட்ட திட்டங்களுக்கு முரணானது எனவும், அது அரச உடமையை துஷ்பிரயோகம்
செய்ததாகக் கருதப்படுவதாலும் குறிப்பிட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் பதவி இடைநிறுத்தம்
செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment