தரையிறங்கியபோது தீப்பற்றி எரிந்த விமானம்
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 241 பயணிகள்


சிங்கப்பூர் நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியபோது என்ஜின் தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து அதிலிருந்து 241 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்ற விமானம் 222 பயணிகள் மற்றும் 19 விமான குழுவினருடன் இத்தாலியில் உள்ள மிலன் நகருக்கு புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் விமானத்தின் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி அதை உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டும் என்பதால், விமானத்தை திருப்பி சிங்கப்பூரில் உள்ள Changi விமான நிலையத்திற்கு இன்று காலை 6.50 மணியளவில் தரையிறக்கியுள்ளனர்.
ஆனால், விமானத்தை தரையிறக்கியபோது வலது என்ஜின் தீப்பற்றி எரிந்துள்ளது. விரைந்து செயல்பட்ட விமானக் குழுவினர் பயணிகள் அனைவரையும் பத்திரமாக தரையிறக்கினர்.
இந்த சம்பவம் குறித்து பயணி ஒருவர் பேசியபோது, ‘மரணத்திற்கு அருகில் சென்றுவிட்டு திரும்பியுள்ளேன்என உருக்கமாக பேசியுள்ளார்.இவர் தனது மொபைலில் எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்
விமானத்தின் என்ஜினில் எப்படி தீப்பற்றியது என்பது குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது.
கீழே இறக்கப்பட்ட 222 பயணிகளும் மற்றொரு விமானத்தின் மூலம் பத்திரமாக மிலன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top