மாடும் எருமை மாடும் போன்றதே நல்லாட்சி
மஹிந்த தெரிவிப்பு!
நாட்டில் தற்போது நல்லாட்சி இல்லையா என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மக்களிடம் கேள்வி எழுப்பியதுடன் இந்த அரசு பொருத்தமற்ற ஓர் அரசாங்கமாகும் பசு மாடும் எருமை மாடும் போன்ற அரசாங்கமே இதுவாகும் எனவும் இருவரினதும் கொள்கைகள் மாறுபட்டவை எனவும் தெரிவித்துள்ளார்.
பொலனறுவை மெதிரிகிரிய பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற பௌத்த பீட அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஒன்றரை ஆண்டுகள் நல்லாட்சி நிலவி வருகின்றது என இதன்போது மஹிந்த கூறினார்.
அங்கு குழுமியிருந்த மக்கள் நாட்டில் நல்லாட்சி இல்லை என கூக்குரல் எழுப்பியுள்ளனர்.
இதன்போது, நல்லாட்சி இல்லையா? என மஹிந்த மீளவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் நினைத்தேன் நல்லாட்சி நிலவும் காரணமாக எனது கூட்டங்களுக்கு மக்கள் திரள மாட்டார்கள் என்று ஆனால் கடந்த தடவை பொலனறுவைக்கு வந்த போது இருந்ததை விடவும் அதிகளவு மக்கள் கூடியுள்ளார்கள்.இதன் மூலம் நல்லாட்சியின் நிலையை என்னால் உணர முடிகின்றது.
எந்த நாளும் தொலைக்கட்சியில் கடன் சுமை பற்றி பேசப்படுகின்றது. பாரியளவில் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.ஒன்பது ஆண்டுகளில் எனது அரசாங்கம் 8000 மில்லியன் கடனை பெற்றது.ஆனால் இவர்கள் ஒன்றரை ஆண்டில் இந்த தொகையை அண்மித்து விட்டார்கள். இந்த அரசாங்கம் ஒர் கால்வாயைக் கூட இதுவரையில் அமைக்கவில்லை.
நான் அமைத்த பல அபிவிருத்தித் திட்டங்களை இந்த அரசாங்கம் அங்கரார்ப்பணம் செய்து வருகின்றது.
நான் ஒன்றும் செய்யவில்லை என்பது போன்று இவர்கள் நடந்துகொள்கின்றார்கள்.
அண்மையில் சிலர் சென்று காணி வழங்கினார்கள் அந்த ஆவணத்தின் மேற்புற கவரில் வேறு நபர்களின் புகைப்படங்கள் காணப்படுகின்றன எனினும் உள்ளே எனது கையொப்பம் காணப்படுகின்றது.
இந்த அரசு பொருத்தமற்ற ஓர் அரசாங்கமாகும் பசு மாடும் எருமை மாடும் போன்ற அரசாங்கமே இதுவாகும். இருவரினதும் கொள்கைகள் மாறுபட்டவை எனவும் இதன்போது மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment