அரசு ரகசியங்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில்
எகிப்து முன்னாள் ஜனாதிபதி
முஹம்மது மோர்சிக்கு
40 ஆண்டுகள் சிறைத்தண்டனை
எகிப்து
நாட்டில் முறைப்படி
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி என்ற
பெயரைப் பெற்றவர்
முஹம்மது மோர்சி.
ஆனால் அவரது
பிரிவினைவாத கொள்கைகள் அவருக்கு எதிராக திரும்பியது.
அவருக்கு எதிராக
மக்கள் கிளர்ச்சி
வெடித்தது. இதையடுத்து கடந்த 2013ம் ஆண்டு
அவர் ஆட்சியில்
இருந்து அகற்றப்பட்டார்.
அதன்பின்னர் அவர் மீது பல்வேறு வழக்குகள்
பதிவு செய்யப்பட்டு
தண்டனை வழங்கப்பட்டு
வருகிறது.
2011-ம் ஆண்டு, ஹோஸ்னி முபாரக்கிற்கு
எதிரான கிளர்ச்சியின்போது
ஜெயில் உடைப்பில்
ஈடுபட்டதாக தொடரப்பட்ட வக்கில் மோர்சிக்கும் அவரது
ஆதரவாளர்களுக்கும் மரண தண்டனை
விதிக்கப்பட்டது.
இந்நிலையில்,
வேவு பார்த்து
அரசின் ரகசியங்களை
கத்தார் நாட்டிற்கு
தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மோர்சி மீதான
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால்,
அவருக்கு ஆயுள்
தண்டனை (25 ஆண்டு சிறைவாசம்) விதித்து நீதிபதி
தீர்ப்பளித்தார். வேவு பார்த்த வழக்கில் கூடுதலாக
15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன்மூலம் அவர் மொத்தம் 40 ஆண்டுகள்
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இதே
வழக்கில் மரண
தண்டனை பெற்ற
முஸ்லிம் சகோதரத்துவ
கட்சியின் 6 பேரின் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.
மேலும் இரண்டு
பேருக்கு ஆயுள்
தண்டனை (25 ஆண்டுகள் சிறைவாசம்) விதிக்கப்பட்டுள்ளது.
![]() |
Judge Mohamed Shrin Fahmy speaks during the trial in Cairo,
Egyp
|
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.