தேசிய நீர் விநியோக
வடிகாலமைப்புச் சபையினது
தேசிய
நீர் விநியோக
வடிகாலமைப்புச் சபையினால் விநியோகம் செய்யப்படும் குடிநீர் சாய்ந்தமருது பிரதேசத்தில் அருந்துவதற்கோ அல்லது சமையல் வேலைகளுக்கோ உபயோகிக்க
முடியாதவாறு அழுக்கான நிலையில் இருப்பதாக இப்பிரதேச மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நூற்றுக்கு
நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் இப்பிரதேசத்தில் ரமழான் மாதத்தில் ஸஹர் செய்வதற்கு இக்குடிநீரைப்
பாவிக்க முடியாத நிலையில் இருப்பதாக மக்கள் ஆத்திரம் தெரிவிக்கின்றனர்.
இது
குறித்து தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபையினது HOTLINE 1939 இலக்கத்துடன் 12 ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு தொடர்பு
கொண்டபோது தங்களின் குடிநீர் விநியோக
சேவையின் தரத்தைப் பாதுகாக்க இந்த அழைப்பு பதிவு செய்யப்படுவதாக சொல்லப்பட்டு பாடல்
ஒலிபரப்பப்படுகின்றதே தவிர வேறு எந்த பதிலும் இல்லை என இது சம்மந்தமாக முறையீடு
செய்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதான் தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபையினது சேவையின் தரமா?
என மக்கள்
கேள்வி எழுப்புவதுடன்
இப்பிரதேச மக்களின்
குடிநீர் விநியோகத்திலுள்ள
அழுக்கான குடிநீர்
சம்மந்தமாக ஆராய்ந்து உடன் தீர்வு காணப்படல்
வேண்டும் என்ற
கோரிக்கையும் விடுக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment