மருந்து மாத்திரைகளுடனான
மேலும் ஒரு போதை வியாபாரம் அம்பலம்

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதுபெருமளவு போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட நபர்கள் மூலம் கொழும்பில் உள்ளசமூக அமைப்பு ஒன்று இதில் தொடர்புடைய தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் சூட்சுமமாக நடைபெறும் குறித்த போதை வர்த்தகத்துடன் அரசியல் தலையீடுஇருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுள் ஒருவருக்கு பிரபல அரசியல்வாதியுடன்நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இலங்கையின் முன்னணி ஆடை வர்த்தக நிலையம்ஒன்றின் நிர்வாகி மற்றும் கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்விகற்ற பிரபலமான நபர் என்றும் இவரை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த சந்தேகநபர்களிடமிருந்து எஸ்ட்ரசி வர்க்க மருந்து வில்லைகள் 49 மற்றும் போதை அடங்கிய எல்.எஸ்.டீ 2500 முத்திரைகள் என்பன விற்பனைசெய்யப்பட்டுள்ளதாகவும்,இதற்கமைய கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்தபெறுமதி 6 லட்சத்துக்கு அதிகம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகரத்தில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிகளில் இடம்பெறும் பாரியளவிலான போதைபொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
போதை மாத்திரையினை பெறுவதற்காக வந்த பெண்கள் இருவர் உள்ளிட்டசந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்க நடவடிக்கைஎடுத்துள்ளதாகவும் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top