கல்முனை
மஸ்ஜிதுன் நூரானிய்யா பள்ளிவாசல்
அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
கல்முனை
மஸ்ஜிதுன் நூரானிய்யா பள்ளிவாசல் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றது.
சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளரும்,அமைச்சர் ரவூப் ஹக்கிமின் இணைப்புச்
செயலாளருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் அவரது கல்முனை இல்லத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
கல்முனை
மஸ்ஜிதுன் நூரானிய்யா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
பள்ளிவாசல் அபிவிருத்தி மற்றும்,புனர்நிர்மானம் செய்வது தொடர்பான சகல ஏற்பாடுகளையும்
துரிதமாக முன்னெடுப்பது என இக்கலந்துரையாடலில்
முடிவாக எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment