அலட்சிய முகம்! வெறுத்த பார்வை!!
தேர்தல் காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைபற்றி வாய்கிழியப் பேசியவர்கள் இன்று புனித ரமழான் மாதத்தில் இப்தார் நிகழ்வு ஒன்றில் ஒரே மேசையில் நேருக் நேர் அமர்ந்திருந்தும் அலட்சிய முகத்துடனும் வெறுத்த பார்வைகளுடனும் வீற்றிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
இவர்கள் முஸ்லிம்களின் மொத்த வாக்குகளைப் பெற்று தமக்கிடையே பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக மாத்திரம்தான் சமூகத்தின் ஒற்றுமைபற்றி மேடைக்கு மேடை பேசுகிறார்களே தவிர உள்ளத்தில் ஈமானிய அடிப்படையில் அப்பேச்சுக்கள் இல்லை என்பதை இவர்களின் இச்செயல்பாடு நிருபித்துக்காட்டுகின்றது என நடுநிலையாகச் சிந்திப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை துறைமுக அதிகார சபையினால் கடந்த 27 ஆம் திகதி திங்கட்கிழமை மருதானை பூக்கர் வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்விலேயே முஸ்லிம் சமூகத்தின் தேசிய
தலைமைத்துவம் மற்றும் பிரதேச தலைமைத்துவங்களின் ஒற்றுமையை அங்கிருந்தவர்களால்காணக்கூடியதாகஇருந்ததாகத்தெரிவிக்கப்படுகின்றது
இந்நிகழ்வில். பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும்
கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கலந்து கொண்டிருந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீர் வழங்கல் மற்றும்
நகரத் திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம்,
இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர், முன்னாள்
அமைச்சர் பஸீர் சேகுதாவூத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹசனலி, மேல்மாகாணசபை உறுப்பினர்களான
பாயிஸ், அர்சாத் மற்றும் துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.டி.ஏ.எஸ்
பிரேமச்சந்திர, துறைமுக அதிகார சபையின் மேலதிகாரிகள் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் சிரேஷ்ட
உப தலைவர் எம்.எம்.எஸ். இல்ஹாம் மௌலானா, செயலாளர், யூ.எல் ஜௌபர், பொருளாளர் எம்.ஹக்கம்
மற்றும், நிர்வாக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment