போலி உறுதி தயாரித்து கொழும்பிலும்
அதனை அண்டியுள்ள
பிரதேசங்களிலும் காணி விற்பனை!
போலி
உறுதி தயாரித்து
கொழும்பிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும்
காணிகள் விற்பனை
செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு
மற்றும் அதனை அண்டியுள்ள இடங்களில் போலியான
அடிப்படையில் காணி உறுதிகள் தயாரிக்கப்பட்டு மோசடியான
முறையில் இவ்வாறு காணிகள் விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால்,
முக்கிய இடங்களில்
சுமார் 4000 காணி உரிமையாளர்களுக்கு 300
கோடி ரூபா
வரையில் நட்டம்
ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து இரகசிய பொலிஸாரிடம்
முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த
பாரிய மோசடியுடன்
நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், வர்த்தகர்கள்,
மற்றும் அரசியல்வாதிகள்,
பாதாள உலகக்குழுவைச்
சேர்ந்தவர்கள் தொடர்புபட்டிருப்பதும் விசாரணைகளின்
மூலம் தெரியவந்துள்ளதாகவும்
கூறப்படுகின்றது.
அண்மையில்
அரச வங்கியினால்
வர்த்தகர் ஒருவருக்கு
15 கோடி ரூபாவிற்கு
விற்பனை செய்யப்பட்ட
காணி உறுதியும்
இவ்வாறு போலியாக
தயாரிக்கப்பட்டது என்பது அம்பலமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடுகளிலிருந்து
இலங்கைக்கு வரும் சிலர் தங்களது தாய்
தந்தையருக்கு சொந்தமான காணிகளுக்கு செல்லும் போது
அவை வெளிநபர்களுக்கு
விற்பனை செய்யப்பட்டுள்ளமை
விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக உயர்மட்டப் பொலிஸ்
தகவல்கள் தெரிவிக்கின்றன
0 comments:
Post a Comment