இந்தோனேஷியாவில் நிலச்சரிவு: 35 பேர் பலி
இந்தோனேஷியாவின்
மத்திய பகுிதியான
ஜாவா மாகாணத்தில்
பெய்த கனமழையால்
ஏற்பட்ட நிலச்சரிவு
மற்றும் வெள்ளத்தில்
354 பேர் உயிரிழந்துள்ளனர்
என அறிவிக்கப்படுகின்றது.
ஜாவா
மாகாணத்தில் உள்ள 16 நகரங்கள் மற்றும் மாநகரங்களில்
கனமழையின் காரணமாக
பலத்த நிலச்சரிவுகளும்
ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதம்
அடைந்தன. அவற்றில்
வசித்து வந்த
பல்லாயிரக்கணக்கான மக்கள், வீடுகளில்
இருந்து வெளியேற்றப்பட்டு
பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து
தேசிய பேரிடர்
மேலாண்மை நிறுவன
செய்தி தொடர்பாளர்
கூறுகையில், மத்திய ஜாவா மாகாணத்தில் உள்ள
16 நகரங்கள் மற்றும் மாநகரங்களில் கனமமழை பெய்துள்ளது.
இதன் காரணமாக
பல இடங்களில்
பெரும் நிலச்சரிவுகள்
ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணிகள் முடுக்கி
விடப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை
மீட்கும் பணியில்
ராணுவத்தினர், பொலிஸார் , தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச்
சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment