91 கிலோ கிராம் கொக்கேன் அடங்கிய கொள்கலனை
பொலிஸ்
விசேட பிரிவும்,
நிதி அமைச்சின்
சட்ட விரோத
போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் இணைந்து கைப்பற்றிய
கொக்கேன் போதைப்பொருள்
91 கிலோ கிராம்
கொண்ட கொள்கலனை
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன இன்று
நேரில் சென்று
பார்வையிட்டார்.
ஒருகொடவத்தையில்
உள்ள சுங்க
திணைக்களத்தின் களஞ்சியப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதுடன்,
இதன் பெறுமதி
ஒரு பில்லியன்
ரூபாவுக்கும் அதிகமாகும்.
சீனி
இறக்குமதி செய்யும்
போர்வையில் பிரேசில் நாட்டிலிருந்து இந்த போதைப்பொருள்
கொண்டுவரப்பட்டுள்ளதுடன், 50 கிலோ கிராம்
எடைகொண்ட சீனி
உறைகளுக்கு மத்தியில் கருப்பு நிற மூன்று
உறைகளில் இந்த
போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நிதி
அமைச்சின் சட்டவிரோத
போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய
தகவலுக்கு அமைய
பொலிஸ் விசேட
பிரிவுடன் இணைந்து
இந்த போதைப்பொருள்
கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில்
ஒருகொடவத்தையில் உள்ள சுங்கப் பிரிவுக்கு திடீர்
கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி,
குறித்த கொள்கலனையும்
பார்வையிட்டதோடு, இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை
மேற்கொள்வதற்கு விசேட குழுக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும்
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துவரும்
நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதாகவும்
ஜனாதிபதி இதன்போது
குறிப்பிட்டார்.
மிகவும்
நேர்மையான முறையில்
தமது பணியை
மேற்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி
தமது நன்றிகளையும்
தெரிவித்துக்கொண்டார்
இந்த
சம்பவம் தொடர்பில்
3 சந்தேக நபர்களை
கைது செய்துள்ளதாகவும்
மேலதிகவிசாரணைகளை மேற்கொள்ள போதை ஒழிப்பு பிரிவினரிடம்
இவர்களை ஒப்படைத்துள்ளதாகவும்சுங்க
அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் புறக்கோட்டையிலுள்ள வியாபாரி ஒருவரே சீனி கொண்டு வரும் போர்வையில் இதனைகொண்டு வந்துள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகதெரிவித்துள்ளனர்
0 comments:
Post a Comment