ரமழான் மாதத்தில் தொழுகையில் ஈடுபடாதவர்கள் விலங்குகள்:

பேராசிரியரின் கருத்தால் வெடிக்கும் சர்ச்சை



புனித ரமழான் மாதத்தில் தொழுகையில் ஈடுபடாதவர்கள் அனைவரும் விலங்குகள் என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் துருக்கி நாட்டை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் உள்ள அங்காரா பல்கலைக்கழகத்தில் முஸ்தபா அஸ்கர் என்ற இஸ்லாமியர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், துருக்கி அரசாங்கத்தை சேர்ந்த தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றுள்ளார்.
அப்போது, இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் ஒரு வாசகம் இருக்கிறது. அதாவது, மனிதர்கள் அனைவரும் தொழுகையில் ஈடுபடுவார்கள். ஆனால், விலங்குகள் தான் தொழுகையில் ஈடுபடாது.
மனித உடல்கள் என்பது தொழுகைக்காக தான் படைக்கப்பட்டது. எனவே, தொழுகையில் ஈடுபடாத அனைத்து மனிதர்களும் விலங்குகள் தான் என பரபரப்பான கருத்தை வெளியிட்டார்.
பேராசிரியரின் இந்த கருத்து தடை செய்யப்படாமல் அப்படியே ஒளிப்பரப்பு செய்யப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
துருக்கி எதிர்க்கட்சியை சேர்ந்த Engin Altay என்பவர் இந்த கருத்தை வண்மையாக கண்டித்துள்ளார்.
பேராசிரியரின் இந்த கருத்து அவர் பைத்தியக்காரர் என்பதை தான் நிரூபிக்கிறது.
நான் குர்ஆனைப்  படித்துள்ளேன். ஆனால், பேராசிரியர் கூறியதுபோல் அந்த வாசகம் எங்கும் இல்லை. இது அவரது கற்பனையான கருத்து.
பேராசிரியர் இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருந்தாலும், அதனை அரசு தொலைக்காட்சி அப்படியே ஒளிப்பரப்பு செய்வதா?
தொழுகையில் ஈடுபடாதவர்கள் விலங்குகள் அல்ல. பேராசிரியரின் முட்டாள்தனமான கருத்தை வெளியிட்ட அந்த தொலைக்காட்சி நிர்வாகிகள் தான் விலங்குகள் என Engin Altay காரசாரமாக பதிலளித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top