முன்னாள் அமைச்சர் யூ.பி.விஜயகோன் காலமானார்
முன்னாள்
பொது நிர்வாகத்துறை மற்றும் நெசவுக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் தூதுவரான
யூ.பி.விஜயகோன்(வயது 79) கண்டி வைத்தியசாலையில்
இன்று உயிரிழந்துள்ளார்
என வைத்தியசாலை
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜே.ஆர்.ஜெயவர்தன
ஜனாதிபதியாக இருந்த காலத்தில் யாழ் மாவட்ட
அமைச்சராக யூ.பி. விஜயகோன் கடமையாற்றியுள்ளார்.
யூ.பி.விஜயகோன்
வெலிமடையை சேர்ந்தவர்
என்றும், இவர்
தன் பட்டப்படிப்பை
பேராதனைப் பல்கலைக்கழகத்தில்
தொடர்ந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகோன்
,2003 ஆம் ஆண்டு
ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள்
அமைச்சரின் வேண்டுகோளிக்கிணங்க அவரது பூத உடல்
பேராதனை பல்கலைகழகத்தின்
வைத்திய பீடத்திற்கு
வழங்கப்பட உள்ளதாக
உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment