புனித ரமழான்
மாதத்தில்
இந்தோனேசியாவில் குர்ஆன் ஓதினால்
இலவசமாகப் பெற்றோல்
இந்தோனேசியாவில்
அரசுக்கு சொந்தமான
பெர்டா மினா
என்ற எண்ணெய்
நிறுவனம் ஒரு
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தற்போது
புனித ரமழான்
மாதத்தில் குர்ஆன்
ஓதத் தெரியும் வாகன ஓட்டிகளுக்கு தலா
2 லிட்டர் பெற்றோல்
இலவசமாக வழங்கப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக போஸ்டர்
மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது.
எனவே,
தலைநகர் ஜகார்தாவில்
உள்ள பெற்றோல்
பங்க்குகளில் ஏராளமான வாகன ஓட்டிகள் நீண்ட
கியூ வரிசையில்
நிற்கின்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரார்த்தனை அறைக்கு
சென்று புனித
குர்ஆனில் ஒரு பகுதியை ஓதி விட்டு
2 லிட்டர் பெற்றோல்
போட்டு செல்கின்றனர்.
ரமழான்
மாதம் முழுவதும்
குர்ஆன் ஓதுவதன் மூலம் குர் ஆன் முழுவதயும் நூலையும் ஓதி முடிக்கும்
வாய்ப்பு கிடைக்கிறது.
அத்துடன் வாகனங்களில்
இலவசமாக பெற்றோல்
நிரப்ப முடிகிறது
என்றும் வாடிக்கையாளர்கள்
மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். 25 கோடி மக்கள் தொகையுள்ள
இந்தோனேசியாவில் 90 சதவீதம் முஸ்லிம்கள்
உள்ளனர்.
0 comments:
Post a Comment