அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக
கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம்
மத்திய
வங்கியின் ஆளுநர்
அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக இன்று
கூட்டு எதிர்க்கட்சியினர்
ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை
முன்னெடுத்துள்ளனர்.
குறித்த
ஆர்ப்பாட்டம் தற்போது கொழும்பு ரீகல் திரையரங்கலிருந்து
ஆரம்பமாகி மத்திய
வங்கி வரை
செல்கின்றது.
இதன்போது,
மத்திய வங்கியின்
ஆளுநரது பதவிக்
காலத்தை நீடிக்க
வேண்டாம் எனவும்,
ஊழல் குற்றச்சாட்டுக்கள்
தொடர்பில் உரிய
விசாரணை நடத்தப்பட
வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும்
இதில் கூட்டு
எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொது மக்களும் உட்பட 1000 இற்கும்
அதிகமானோர் கலந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இரு எம்.பிக்கள் காயம்: ஆஸ்பத்திரியில் அனுமதி
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிணைந்த
எதிரணியினர் மேற்கொண்டுள்ள இவ்வார்ப்பாட்டம்,
உலக வர்த்தக
மையத்துக்கு முன்பாக இடம்பெறுகின்றது. முன்னாள் அமைச்சரும்
எம்.பியுமான
ரோஹித அபேகுணவர்தன
மற்றும் ஸ்ரீயாணி
விஜயவிக்ரம ஆகிய இருவருமே கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment