அடிக்கடி கைப்படம்
எடுத்துக் கொள்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை
முக சருமத்தின் எதிரி கைப்படம்!
செல்லிடப்பேசிகள்
மூலம் கைப்படம்
எடுப்பது முகத்தில்
உள்ள சருமத்துக்கு
கேடு விளைவிக்கலாம்
என்று பிரிட்டனைச்
சேர்ந்த மருத்துவர்
எச்சரித்துள்ளார்.
இப்போது
கைப்படம் எடுத்துக்
கொள்வது மிகவும்
சகஜமான செயலாக
மாறியுள்ளது.
தங்கள்
கைப்படத்துக்கு "மிகச் சரியான
பின்புலம்' இருக்க வேண்டும் என்று தன்னிலை
மறந்து எடுத்த
முயற்சியில் உயிரையே விட்டவர்கள் பலர்.
உயிரைப்
பறிக்காவிட்டாலும், முகச் சருமத்தின்
பொலிவை பலி
வாங்கும் தன்மை
செல்லிடப்பேசிக்கு உண்டு என்கிறார்
பிரபல பிரிட்டன்
மருத்துவர்.
இது
குறித்து பிரிட்டனின்
பிரபல சரும
இயல் மருத்துவர்
சைமன்
úஸாவாக்கி கூறியிருப்பதாவது:
கைப்படம்
எடுத்து உடனுக்குடன்
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது இப்போது உலகெங்கும்
அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஒரே
நாளில் பல
முறை தங்களையே
கைப்படம் பிடித்து
பதிவு செய்பவர்கள்
ஏராளம். செல்லிடப்பேசிகளிலிருந்து
வெளியாகும் மின்காந்த அலைகள் பொதுவாகவே நமது
மரபணுக்களில் காலப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை.
அவ்வப்போது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை சரி
செய்து கொள்ளும்
திறன் சரும
மரபணுவுக்கு உள்ளது. ஆனால், தொடர்ந்து அதிக
அளவிலான மின்காந்த
அலைகள் வெளிப்படும்போது
பாதிப்படையும் நம் சருமம் அதனை சீர்
செய்து கொள்வதற்கான
கால அவகாசம்
இருப்பதில்லை. இதனால் வேகமாக மாறுதலுக்கு உள்ளாகும்
சருமம் திரும்பவும்
பழைய நிலைக்கு
வருவது இயலாமல்
போகிறது. இதைத் தொடர்ந்து முகத்தில்
சுருக்கம், கோடு ஏற்படுகிறது. செல்லிடப்பேசி திரையிலிருந்து
வெளிப்படும் நீல ஒளியும் நமது சருமத்துக்கு
பாதிப்பை ஏற்படுத்துகிறது
என்று அவர்
தெரிவித்துள்ளார்.
அடிக்கடி
கைப்படம் எடுத்துக்
கொள்ள விரும்புபவர்கள்
இனி எச்சரிக்கையோடு
இருக்க வேண்டும்!
0 comments:
Post a Comment