பாகிஸ்தானில் இசை கலைஞர் சுட்டு கொலை
'கவ்வாலி'
எனப்படும் இஸ்லாம்
மத இசை
கலைஞரான, அம்ஜத்
சப்ரி, பாகிஸ்தானின்
கராச்சி நகரில்,
மர்ம நபர்களால்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாக்.,
பொலிஸார் கூறியிருப்பதாவது: கராச்சி
நகரில், அம்ஜத்
சப்ரியும், அவர் உதவியாளரும், காரில் சென்ற
போது, பைக்கில்
பின் தொடர்ந்து
வந்த மர்ம
நபர்கள், சரமாரியாக
துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அம்ஜத்
சப்ரி, மருத்துவமனையில்
சிகிச்சை பலனளிக்காமல்
உயிரிழந்தார்.
இஸ்லாமின்
சூபி பிரிவில்,
கவ்வாலி இசை
பிரபலமாக திகழ்கிறது.
இதில், அம்ஜத்
சப்ரி புகழ்பெற்று
விளங்கினார். இவருக்கு எதிராக, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில்,
2014ல் தொடரப்பட்ட
வழக்கு, நிலுவையில்
உள்ளது.




0 comments:
Post a Comment