களனி பல்கலைக்கழக
மாணவர்களின்
பேரணி மீது கண்ணீர்புகைப் பிரயோகம்
நீதிமன்ற
உத்தரவையும் மீறி, கொழும்பு கோட்டையை நோக்கி,
பேரணியை மேற்கொண்ட
களனி பல்கலைக்கழக மாணவர்கள் மீது, கோட்டை லோட்டஸ்
சந்தியில் வைத்து,
பொலிஸார் கண்ணீர்புகைப்
பிரயோகம் மற்றும்
தண்ணீர்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டு அப்பேரணியை கலைத்துள்ளனர்.
பகிடிவதை
தொடர்பில் கைது
செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி இன்று
களனி பல்கலைக்கழக
மாணவர்கள் ஆர்ப்பாட்டப்
பேரணி ஒன்றை
நடாத்தினார்கள்.
இந்த
ஆர்ப்பாட்டம் களனி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து
ஆரம்பமாகி ஜனாதிபதி
செயலகம் வரை
சென்றுள்ளது. இதன்போது ஜனாதிபதி செயலகத்தினுள் செல்ல
முற்பட்ட வேளையிலேயே
குறித்த தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.