நாமல் ராஜபக்ஸவுக்கு இன்று அழைப்பாணை



 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை, இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு, அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அவருக்குச் சொந்தமான சட்ட நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம்  பெறுவதற்காகவே அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சட்ட நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்கள் தொடர்பிலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று குறித்த பிரிவினரின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவன்கார்ட் பாதுகாப்புச் சேவையின் பணிப்பாளர் நிசாங்க சேனாதிபதியால், குறித்த சட்ட நிறுவனத்துக்கு 22 மில்லியன் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த மே மாதம் 31ஆம் திகதி, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவினர் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


UPFA parliamentarian Namal Rajapaksa has been asked to report to the Financial Crimes Investigation Division (FCID) at 9.00 a.m. today in connection with an investigation into a law firm owned by him. Police said he would be questioned over some of the transactions handled by the law firm known as Gowers. On May 31, the FCID grilled Avant Garde Security Services (Pvt) Ltd. Chairman Nissanka Senadipathi over a questionable transfer of Rs.22 million to Gowers, the law and consultancy firm owned by Mr. Rajapaksa. Sources said the transfer was reported to have been a personal loan granted to the company by Mr. Senadhipathi. But the FCID is investigating the legitimacy of the massive transfer of funds - See more at: http://www.dailymirror.lk/111600/FCID-to-quiz-Namal-over-Gowers-law-firm-today#sthash.7SaPtohE.dpuf

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top