68 வயதில் பாடசாலைக்குச்
செல்லும் தாத்தா
நேபாளத்தில்
துர்கா காமி
என்ற முதியவர்
தனது 68 வயதிலும்
பாடசாலைக்குச் சென்று பயின்று வரும்
சம்பவம் பெரிதும்
வியப்பிற்குள்ளாகியுள்ளது.
அந்த
முதியவர் புதர்
மண்டிய வெள்ளை
தாடியுடன், கையில் கைத்தடி உதவியுடன் கம்பீரமாக
பாடசாலை சீருடையில் பாடசாலைக்கு சென்று வருகின்றார்.
அவர் தனது
குழந்தை பருவத்தில்
இருந்தே படிப்பை
முடித்துவிட்டு ஆசிரியராக வேண்டும் என்பது அவரின்
இலக்காகும். தற்போது அவருக்கு வயது 68. அவருக்கு
ஆறு குழந்தைகளும்,
8 பேர குழந்தைகளும்
உள்ளனர். அவர்
மனைவி இறந்த
தனிமையை போக்கிக்கொள்ள
வாரத்தின் ஆறு
நாட்களும் பாடசாலைக்கு
சென்று விடுவாராம்.
அவர்
காத்மான்டுவில், ஸ்யாங்ஜா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ
கால பைரவர்
உயர்நிலை பாடசாலையில்
பயின்று வருகின்றார்.
பாடசாலைக்கு செல்வதினால் என் கவலைகள் அனைத்தும்
மறக்கின்றேன் என்கிறார்.. நேபாள மாநிலத்தின் வயது
மிகுந்த பாடசாலை
மாணவன் இவராவர்.
முன்னதாக ஆரம்ப
பாடசாலையில் தனது படிப்பை முடித்தார். பின்னர்,
மேல்நிலை பாடசாலையில்
சேர்ந்தார்.
ஸ்ரீ
கால பைரவர்
உயர்நிலை பாடசாலை
ஆசிரியர் கொய்ராலா
அவருக்கு மற்ற
மாணவர்களை போல்
படிக்க புத்தகம்
மற்றும் சீருடையை
வழங்கி அவருக்கு
முன்னுரிமை அளித்தார். தன் அப்பா வயதில்
இருக்கும் ஒருவருக்கு
பாடம் எடுப்பதில்
தனக்கு மிகவும்
வியப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதாக
ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
வகுப்பில்
20 மாணவர்களுடன் அவர் பத்தாம் வகுப்பு படித்து
வருகின்றார். சக மாணவர்கள் அவருடன் சேர்ந்து
பல்வேறு விளையாட்டுகளில்
கலந்து கொள்கின்றனர்.
14 மற்றும் 15 வயது மாணவர்களுடன் படித்து வருவது
தனக்கு மிகுந்த
மகிழ்ச்சியளிப்பதாக கூறுகிறாராம்.
சாகும்
வரை படிக்க
வேண்டும் என்பதே
எனது லட்சியம்.
வயது ஒரு
தடையில்லை என்று
என்னை போன்று
உள்ளவர்கள் புரிந்து கொள்ளலாம் என்றும் அவர்
கூறியுள்ளாராம்.
0 comments:
Post a Comment