கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரி
பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் இப்தார் நிகழ்வு
கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை வெள்ளவத்தை மியாமி வரவேற்பு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை உறுப்பினர்களின் ஒன்றுகூடலுடன் புனித இப்தார் நிகழ்வினையும் ஒழுங்கு செய்திருந்தனர்.
பொறியியலாளர் எம்.எம்.எம்.மைஸான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களின் பங்குபற்றுதலோடு கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கொழும்பிலும் அதன் சுற்றயல் பிரதேசத்தில் வாழும் , அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில்புரியும் மற்றும் உயர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் கல்லூரியின் பழைய மாணவர்களும் கல்லூரியின் பழைய மாணவர் சங்க ( தாய்ச்சங்க ) செயலாளர் பொறியியலாளர் எம்.ஸி.கமால் நிஸாத் , பாடசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் நில அளவையாளர் எம் ஏ.றபீக் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
படங்கள்: அஸ்ரப் ஏ.சமட் ( Ashraff A Samad)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.