மைத்திரியின்
பேஸ்புக் விருப்பங்கள்
இன்று ஒரு இலடசத்து 36 ஆயிரம்
மளமளவென சரிந்தன
மில்லியனுக்கும்
அதிகமான விருப்பங்களைப்
(Like) பெற்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால்
சிறிசேனவின் பேஸ்புக் விருப்ப பக்கத்தில் (Like Page) விருப்பங்களின் எண்ணிக்கை ஒரே நாளில்
சடுதியாக 136,066 குறைவடைந்துள்ளது.
இலங்கை அரசியல்வாதிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ ஆகியோர் முதலிரு
இடங்களை பிடித்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவின் பேஸ்புக்
விருப்பப் பக்கத்தில்
(திங்கட்கிழமை மாலை 7 மணிவரை) 1,002,389 விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதேநேரத்தில்
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவின் பேஸ்புக் விருப்பப் பக்கத்தில் (திங்கட்கிழமை
மாலை 7 மணிவரை) 1,001,484 விருப்பங்கள்
தெரிவிக்கப்பட்டிருந்தன.
எனினும்
இன்று செவ்வாய்க்கிழமை
மைத்திரிபால சிறிசேனவின் பேஸ்புக் பக்க விருப்பங்கள்
1,002,389 லிருந்து 866,323 ஆக (இரவு 8.30 மணி) குறைவடைந்துள்ளது.
அதன்படி, அவரது
பேஸ்புக் பக்கத்தில்
விருப்பம் தெரிவித்திருந்த
136,066 பேர்
UnLike செய்துள்ளனர். இதேவேளை, மஹிந்த
ராஜபக்ஸவின்
பேஸ்புக் பக்கத்தின்
விருப்பங்கள் 634 ஆல் அதிகரித்து 1003,023ஆக
(இரவு 8.30 மணி) காணப்படுகின்றது.
0 comments:
Post a Comment