பேராசிரியர் மஹ்ருப் இஸ்மாயில் காலமானார்
கொழும்பு
வைத்தியக் கல்லூரியின
; முதலாவது முஸ்லிம் பீடாதிபதியும் நுண்ணியல் துறை
பேராசியருமான ஓய்வுபெற்ற பேராசிரியர் மஹ்ருப் இஸ்மாயில்
இன்று (13.06.2016) தனது 85வது
வயதில் காலமானார்.
அன்னார்
இலங்கைப் பாராளுமன்;றத்தின் முதல்
படைக்கலச் சேவிதர்
ஜனாப் எம்.எம். இஸ்மாயில்
அவர்களின் புதல்வரும்
சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட தென் கிழக்கு
பல்கலைக் கழகத்தின்
முன்னாள் வேந்தர்
தேசபந்து ஜெசீமா
இஸ்மாயில் அவர்களின்
அன்புக் கணவரும்
ஆவார்.
தனது
சேவைக்காலத்தில் யானைக்கால் நோய் பரப்பும் நுளம்புகளைக்
கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிகளில் முக்கிய பங்களிப்புகள்
செய்த பேராசிரியர்
மஹ்ருப் இஸ்மாயில் ஓய்வு பெற்றபின்
தனது மனைவியுடன்
இணைந்து பல
சமூக சேவைகளில்
ஈடுபட்டு வந்தார்;.
சுனாமியின்
பின்னர் கல்முனைப்
பிரதேசத்தில் பல நிவாரணப் பணிகளில் இவரின்
பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
சகல
இன மக்களுடனும்
மிக அன்பாகவும்
எளிமையாகவும் நகைச்சுவையுடனும் பழகும் உயர்ந்த பண்பாளரான பேராசிரியர் மஹ்ருப் இஸ்மாயில் அம்பாரை
மாவட்ட சர்வ
சமய சம்மேளனத்தின்
செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தார்..
அன்னாருக்கு
'ஜென்னதுல் பிர்தௌஸ்' எனும் சிறப்பான மறுமை
வாழ்வு கிடைக்கப்
பிரார்த்திப்பதோடு அவரைப் பிரிந்து துயருறும்
அவரது மனைவி,
மக்கள் மற்றும்
குடும்பத்தினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
டாக்டர்
எம். ஐ.
எம். ஜெமீல்
தலைவர்,
அம்பாரை மாவட்ட
சர்வ சமய
சம்மேளனம்
தலைவர்;,
சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் சம்மேளனம்
செயலாளர்,
கல்முனை வைத்திய
சங்கம்
0 comments:
Post a Comment