எப்பாவல பொஸ்பரேட் நிறுவனத்தில் தீ!
பெருமளவு ஆவணங்கள் எரிந்து
நாசம்!!
இலங்கை
அரச பொஸ்பேட்
நிறுவனத்தின் எப்பாவல அலுவலகத்தில் இன்று அதிகாலை 03.00 மணியளவில் பரவிய தீ
காரணமாக, சுமார்
50-60 இலட்சம் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக, அந்த
நிறுவனத்தின் தலைவர் உபாலி அனுராத திஸாநாயக்க
தெரிவித்துள்ளார்.
இன்று
அதிகாலை 04.00 மணியளவில் குறித்த கட்டடத்தில் தீ
பற்றியுள்ளதை கண்ட பாதுகாப்பு ஊழியர்கள் பொலிஸாருக்கு
அறிவித்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை
மேற்கொண்டனர்.
இதன்படி
அங்கு விரைந்த
அனுராதபுரம் மாநகர சபை தீயணைப்பு வீரர்களின்
உதவியுடன் தீ
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, இதனால் குறித்த
அலுவலகத்தின் வழங்கல் பிரிவு, கணக்காய்வு பிரிவு,
ஆவண காப்பகங்கள்
போன்றவற்றுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும்,
அங்கிருந்த கனணி, தளபாடங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட
பல பொருட்கள்
தீக்கிரையாகியுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.