உதய கம்மன்பில, மொஹமட் முஸம்மில் ஆகியோரைப்  பார்வையிட

மெகசீன் சிறைச்சாலைக்குச் சென்ற மஹிந்த!


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் ஆகியோரைப் பார்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக் இன்று காலை மெகசீன் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
போலி அட்டர்னி பத்திரம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு சொந்தமாக 11 கோடி ரூபா பெறுமதியான பங்குகளை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் உதய கம்மன்பில விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் மொஹமட் முஸம்மில் கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட மாட்டாது, அவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டு எதிர்கட்சி இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை இன்று பார்வையிட சென்ற போதே செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய இருப்பதை தாம் மறுப்பதாகவும் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் புதிய கட்சி உருவாக்கப்பட மாட்டாது, மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ன நடக்க உள்ளது என்பதை என்றும் மஹிந்த கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் பழிவாங்கல் எண்ணங்கள் காரணமாகவே கூட்டு எதிர்க்கட்சியின்உறுப்பினர்கள் கைது செய்யப்படுகின்றார்கள் என அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top